சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படம் தயாராகி வருகிறது. ரஜினிகாந்த்தின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த படம் படுதோல்வி அடைந்தது. அதேபோல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படமும் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. எனவே எப்படியாவது இந்த ஜெயிலர் படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று ரஜினிகாந்த்தும், நெல்சனும் ரொம்ப தீவிரமாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே ஜெயிலர் படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்னும் தகவல் வெளியானது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படமும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்கிற அறிவிப்பு அண்மையில் வெளிவந்தது. இதனால் ஜெயிலர் படம் ஏப்ரல் மாதம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜெயிலர் படத்தில் நடிக்கும் நடிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் சொன்ன தேதியில் ஜெயிலர் படத்தை ரிலீஸ் செய்யமுடியாது என்று சொல்லப்படுகிறது. எனவே பொன்னியின் செல்வன் பார்ட் 2 வெளியான பிறகு தான் ஜெயிலர் படம் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.
