சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் அமேசானில் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜெய் பீம். இருளர் இன மக்களை காவலர்கள் கொ*டுமைப்படுத்தி லாக் அப் டெ*த் செய்வதை மிகவும் தத்ரூபமாக படத்தில் காட்டி இருப்பார்கள். இப்படியும் இந்த நாட்டுல கொ*டுமைகள் எல்லாம் நடக்குதா என்று பார்ப்பவர்கள் கண்கள் கலங்கும் அளவிற்கு படத்தில் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.
இந்த படத்தில் காட்டுவதெல்லாம் வெறும் 10 சதவீதம் கூட இல்ல, இதை விட இருளர் இன மக்கள் ரொம்ப கொ*டுமைகளை அனுபவித்து வந்தார்கள் என்று படக்குழுவும், இருளர் இன மக்களும் தினமும் பேட்டி கொடுத்து வருகின்றனர். இந்த படம் நம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பெருவாரியான மக்களால் பார்த்து நிறைய பாராட்டுகளை பெற்றுவருகிறது. ஒரு விஷயம் நல்லா போனால் யாருக்கும் பொறுக்காது. அது தான் இயற்கை. படம் வெளியான நாள் முதலே படத்தை தமிழ்நாட்டின் முதல்வரில் இருந்து அனைத்து தரப்பு ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.
இந்த படத்தில் வன்னியர் சமூகத்தினரை வேண்டுமென்றே இ*ழிவுபடுத்தி உள்ளதாக அன்புமணி ராமதாஸ் கு*ற்றம் சாட்டி இருந்தார். படக்குழு ம*ன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் வன்னியர் சமூக அமைப்பினர் போ*ராட்டம் நடத்தி வருகின்றனர். அப்படி என்ன தப்பு பண்ணிட்டாங்க என்று கேட்டால் படத்தில் வில்லனாக சித்தரிக்கப்படும் போலீஸ் அதிகாரியின் பெயர் குருமூர்த்தி என்று பெயர் வைத்துள்ளது தவறாம். உண்மையில் அந்த வ*ழக்கில் சம்மந்தப்பட்ட காவல் அதிகாரியின் பெயர் அந்தோணி சாமி. அந்த பெயரை வைக்க வேண்டி தானே, அதை விட்டுபுட்டு எதுக்கு குருமூர்த்தி பெயரை பயன்படுத்துகிறீர்கள் என்று சொல்கிறார்கள்.
படத்தின் தொடக்கத்திலேயே இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது, இதில் குறிப்பிடும் பெயர்கள் எல்லாம் சித்தரிக்கப்பட்டவை என்று கொட்ட எழுத்தில் போட்டு விடுகிறார்கள். அப்புறம் ஏன் இப்படி பிரச்சனை பண்ணுறாங்க என்று மக்கள் குழப்பத்தில் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் நீங்க எங்க சமூகத்தை இ*ழிவு படுத்துற மாதிரி காட்சிகள் வைத்துள்ளதால் 5 கோடி ரூபாய் ந*ஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் கேட்கிறார்கள்.
இந்த மாதிரி சம்மந்தம் சம்மந்தமே இல்லாமல் பேசும் அந்த கட்சிக்கு மக்கள் யாரும் ஆதரவு தரவில்லை. எல்லா கட்சியினரும் பாஜக கட்சி உட்பட அனைவரும் சூர்யாவிற்கு தான் ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஒரு படத்தை படமாக பார்க்காமல் ஏன் இப்படி பேசுறாங்க என்று மக்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். இதே அன்புமணி ராமதாஸ் த்ரௌபதி, ருத்ர தாண்டவம் படம் வெளியானபோது எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
அந்த படத்தில் வில்லன் கதாப்பாத்திரமாக சித்தரிக்கப்பட்ட நபர் யார் என்பது தமிழ்நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் தெரியும். அந்த நபர் த்ரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை வெறும் படமாகத்தான் பார்த்தார். இவர்களை போல பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கில் பார்க்கவில்லை. ஜெய் பீம் படத்தை சும்மா விட்ருந்தாலே சூப்பர் ஹிட் அடித்திருக்கும். இவங்க வேற பப்லிஸிட்டி பண்ணி இப்போ உலக மகா ஹிட் அடிக்க வச்சுட்டாங்க. நாட்டுல கொ*ரோனா, மழை, வெள்ளம், புயல்ன்னு இவ்வளவு பிரச்சனை போய்கிட்டு இருக்கு. இதுக்கெல்லாம் வாயை தொறக்காம ஒரு படத்துக்காக இப்படி பிரச்சனை பண்ணுறாங்களே என்றும் சில மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஜெய் பீம் படத்திற்கு இவ்வளவு பிரச்சனைகள் வந்தபோதும் இதுவரை முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றோர் சூர்யாவிற்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. குறைந்தபட்சம் சமூக வலைத்தளத்திலாவது தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தால் மக்கள் சந்தோசப்பட்டிருப்பார்கள். யார் ஆதரவு தெரிவிச்சா என்ன, தெரிவிக்கலைன்னா என்ன நாங்க உங்க பக்கம் இருக்கோம் என்று மக்கள் சூர்யாவிற்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். எது எப்படியோ சூர்யா பேசுவதை பார்த்தால் அவர் ஒன்னும் ந*ஷ்ட ஈடு குடுக்கற மாதிரி தெரியல, நாங்க ந*ஷ்ட ஈடு கேட்டது எங்க தப்பு தான் என்று இன்னும் சில நாட்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் அறிக்கை விட்டுவிடுவார்கள் என்று தான் தோன்றுகிறது.