உலகின் மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் நாடு சீனா. சீனாவிற்கு அடுத்த இடத்தில் நம்ம இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் மக்கள் தொகை நம் நாட்டில் அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்களுக்கு தேவையான உன்ன உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் கூட இல்லாமல் மக்கள் திண்டாடுகின்றனர்.

உலகில் அதிக பரப்பளவு கொண்ட நாடு ரஷ்யா. ஆனால் அந்த ரஷ்யாவின் மக்கள் தொகை ரொம்ப கம்மி. உலகில் நிறைய நாடுகள் பரப்பளவில் அதிகமாக இருந்தாலும் மக்கள் தொகை சில நாடுகளில் மிகவும் குறைவாகவே உள்ளது. அப்படிப்பட்ட ஒரு நாடு தான் இத்தாலி.

ஆலிவ் ஆயில் உற்பத்தியில் சிறந்து விளங்கும் புக்லியா (Puglia) பிராந்தியத்தில் பிரெசிசி (Presicce) என்ற புகழ்பெற்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்திற்கு குடிபெயரும் மக்களுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்குவதாக இத்தாலி அரசு அறிவித்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள மிகப்பெரிய கட்டிடங்கள், மாளிகைகள் எல்லாம் மக்கள் வசிக்காமல் காலியாகவே உள்ளது.

இந்த 25 லட்சம் ரூபாயை வைத்து இந்த நகரத்தில் ஒரு மிகப்பெரிய மாளிகை வாங்கிவிடலாம். அந்த அளவுக்கு இந்த நகரம் ஒரு விலை மலிவான நகரம். இந்த நகரத்தில் எந்தவிதமான தொழில்நுட்ப முன்னேற்றமும் இருக்காது. நவீன தொழில்நுட்ப வசதிகளும் இந்த நகரத்தில் இருக்காது. அதனால் தான் இங்கு வாழ்ந்த மக்கள் மற்ற நகரங்களுக்கு சென்றுவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. எந்த வித தொழில்நுட்ப வசதியையும் எதிர்பார்க்காமல் அமைதியை விரும்பும் மக்கள் இந்த நகரத்துக்கு குடியேறலாம். அதேபோல இத்தாலியில் உள்ள ராஷியோ எனும் கிராமத்தில் திருமணம் செய்துகொண்டால் அந்த மணமகனுக்கு 1.67 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று இத்தாலி அரசு அறிவித்துள்ளது.
