கடந்த சில வருடங்களாகவே நம்ம நாட்டில் உழைத்து பிழைப்பவர்களை விட அடுத்தவர்களை ஏமாற்றி பிழைக்கும் ஆட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இரிடியத்தின் பெயரில் தற்போது ஒரு ஏமாற்றுவேலை ஆரம்பமாகி உள்ளது.

இரிடியத்தில் 5 லட்சம் முதலீடு செய்தால் அடுத்த இரண்டு வருடங்களில் 3 கோடி வரை சம்பாதிக்க முடியும் என்று சேலம், கன்னியாகுமாரி போன்ற பகுதியில் ஒரு வதந்தியை பரப்பி பணம் பறிக்கும் கும்பல் நடமாடி வருகிறது. இருடியத்தில் முதலீடு செய்வது என்பது பித்தலாட்ட வேலை என்றும், இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும், இதுபோன்ற ஆட்கள் உங்களை தொடர்பு கொண்டால் உடனே காவல்துறையில் அவர்களை பிடித்துக்கொடுங்கள் என காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு பொதுமக்களுக்கு அறிவுறித்தியுள்ளார்.
