Timeless

என்னங்கடா பித்தலாட்டம் இது? சிற்பம் என்று சொல்லி கூட்டிட்டு வந்து கடைசியில ஏமாத்த பார்த்தா சும்மா விட்ருவோமா? இதுல எது சிற்பம் எங்க இருக்கு ஒழுங்கா சொல்லுங்க?

Jun 14 2021 06:27:00 PM

இத்தாலியை சேர்ந்த சிற்பக்கலைஞரான சால்வடோர் கராவ் உருவமே இல்லாத ஒரு சிற்பத்தை வடிவமைத்து அதை ஏலத்தில் விட்டு பணம் சம்பாதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 67 வயதாகும் சால்வடோர் கராவ் இது நான் என்ற தலைப்பில் கண்ணுக்கு தெரியாத சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த லோ சோனோ சிற்பமானது கடந்த மாதம் இத்தாலியில் உள்ள ஆர்ட் ரைட்டில் ஏலம் விடப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

italy invincible-sculpture

இந்த சிற்பத்தின் ஆரம்ப விலை 6000 யூரோ டாலர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இது எப்படியும் 6000 முதல் 9000 யூரோ டாலர்கள் வரை ஏலத்தில் எடுக்கப்படும் என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக ஏலத்தொகை அதிகமானது. இறுதியில் 18,300 அமெரிக்க டாலர்கள் கொடுத்து ஒருவர் இந்த சிற்பத்தை ஏலத்தில் வாங்கியுள்ளார்.

italy invincible-sculpture

உருவமற்ற சிற்பத்தை வாங்கிய அந்த நபருக்கு நம்பகத்தன்மையின் சான்றிதழும், அறிவுறுத்தல்களின் தொகுப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உருவமற்ற சிற்பத்தை வீட்டில் ஐந்தடி இடைவெளி விட்டு காட்சிக்கு வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சால்வடோர் கராவ், வெற்றிடம் என்ற தத்துவத்தை அடிப்படையாக வைத்து இந்த சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. கண்ணுக்கு தெரியாத கடவுளை நாம் காட்சிப்படுத்துவது போலத்தான் இந்த சிற்பமும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

italy invincible-sculpture

உருவமற்ற சிற்பங்களை இவர் தயாரிப்பது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே இரண்டு மூன்று முறை இதுபோன்ற படைப்புகளை இவர் உருவாக்கியுள்ளார். இவரது படைப்புகள் அனைத்தையும் இத்தாலிய கலாச்சார நிறுவனம் ஆதரித்து அங்கீகாரம் அளிப்பது தான் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.