இந்தப்பொண்ணு யாருன்னு தெரியுதா? தெரியலைன்னா நீங்க 2000க்கு முன்னாடி பிறந்தவங்கன்னு அர்த்தம். பேரு அமலா சாஜியாம். ஸ்கூல் படிக்கிற பொண்ணு. ஆனால் படிக்கிற வேலையை தவிர எல்லாமே பண்ணுது. டெய்லி ஹோம் வொர்க் பண்றத தவிர எல்லாமே பண்ணுவாங்க. ரெண்டு வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்டால் தான், இவங்க மனுசு ஆறுமாம்.
இன்ஸ்டாகிராமில் இரண்டு மில்லியன் பின்தொடர்வோர் இருக்காங்க. விளம்பர கம்பெனிகள் நேரடியா அணுகி லம்பா பணம் கொடுத்து விளம்பரங்களில் நடிக்க சொல்றாங்க. இப்போ இருக்க 2கே கிட்ஸ், இவங்கள மாதிரியான ஆட்கள் என்ன சொன்னாலும் செய்ய தயாரா இருக்காங்களாம். அவங்க பொறுத்தவரைக்கும் மதன் கௌரி தான் மாஸ் ஹீரோ, அமலா சாஜி ஹீரோயின். சிறந்த பைக் ரேஸ்சர் என்றால் அது டிடிஎப் வாசன்.
அதிக வேகத்தில் வண்டியை ஓட்டுவது, வீலிங் செய்வது. அதுக்காகவே ஒரு கூட்டம் உருவாகி விட்டது. தேர்வில் வாங்கும் மார்க்கை விட லைக்ஸ் வாங்க வேண்டும் என்பது தான் அவங்க தலையில் ஓடிக்கிட்டிருக்கு. எப்படி வீடியோ போட்டால் யார் பாப்பாங்க. சீக்கிரமே பிரபலம் ஆக என்ன வழி என குறுக்கு புத்தி வர ஆரம்பித்துவிட்டது. இவர்களால் உண்மையாகவே கல்வியின் அவசியம் என்ன என்று தெரியாமலே போய்விட்டது.
அந்த பெண்ணிடம் கேட்டா உடம்பை காட்டி வீடியோ போட்டா காசு வரும்; அது மட்டும் தான் தெரியும். படிச்சா நல்ல வேலைக்கு போய் கைநிறைய சம்பாதிக்கலாம் என்னும் ஒரு விதை பெற்றோர் மனதில் விழுந்து விட்டது. அதன் நம்ம பொண்ணு இப்பவே வீடியோ போட்டு நல்லா சம்பாதிக்கிறாளே என்ற எண்ணம் இவர்கள் மாதிரியானோரின் பெற்றோருக்கு வர ஆரம்பித்துவிட்டது. கல்வி சம்பாதிக்க மட்டுமே என்னும் ஒற்றை காரணமே இது போன்ற தவறுகள் பெருக காரணமாகும்.