notification 20
Misc
ராணுவத்தில் பயன்படுத்தும் நாய்கள் அதன் இறுதி காலத்தில் கொ*ன்று விடுவார்கள் என்று சொல்கிறார்களே! எதற்காக இப்படி ராணுவ நாய்களை கொ*ல்கிறார்கள்?

ரொம்ப நாட்களாகவே ராணுவத்தில் வேலை செய்யும் நாய்கள் வயது மூப்பு ஏற்படும்போது அவற்றை கொ*ன்று விடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த விஷயம் உண்மையா? பொய்யா? என்று தெரிந்துகொள்ள ராணுவத்தில் வேலை செய்யும் உறவினர் ஒருவரிடம் கேட்டேன். ராணுவத்தில் எல்லா விதமான நாய்களையும் வேலைக்கு எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.  குறிப்பிட்ட உயரம் கொண்ட லேப்ரடார், பெல்ஜியம், செப்பர்டு வகை நாய்களை தான் ராணுவத்திற்காக சேர்த்துக்கொள்வார்கள்.

மனிதர்களுக்கு நிறைய பயிற்சிகள் வைத்து ராணுவத்தில் வேலைக்கு ஆட்களை எடுப்பதைப் போல நாய்களுக்கும் க*டினமான பயிற்சிகள் வைத்து தான் ராணுவத்திற்கு வேலைக்கு எடுப்பார்கள். ஒரு நாயை ஒரு குறிப்பிட்ட வேலைக்காக மட்டுமே பயன்படுத்துவார்கள். உதாரணமாக ரோந்து பணிகளில் ஈடுபடுவது, க*ன்னி வெ*டிகளை கண்டுபிடிப்பது, ராணுவ தளங்களை பாதுகாப்பது, கா*யமடைந்த வீரர்களை கண்டறிவது என பல வேலைகள் ராணுவத்தில் உள்ளன.

ஒரு குறிப்பிட்ட நாய்க்கு ஒரு குறிப்பிட்ட பயிற்சியை மட்டும் கொடுத்து வேலை வாங்குவார்கள். மீரட் நகரில் இதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. போ*ர்க்களத்தில் கா*யமடைந்த நாய்களையும், வயது மூப்பு அதிகமான நாய்களையும், நோ*ய் வாய்ப்பட்ட நாய்களையும் இந்திய ராணுவக் கொள்கைப்படி ர*த்தக் கொ*லை செய்வது தான் வழக்கம். இந்த பயிற்சி பெற்ற நாய்களை நம்மைப் போன்ற சாதாரண மக்களால் வளர்க்க முடியாது.

நாய்களை கொ*ல்லும் வழக்கம் நிறைய நாடுகளில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டன. ஆனால் தற்போது இந்த நடைமுறை அதிகம் இல்லை என்று சொல்லப்படுகிறது. அமெரிக்கா போன்ற நிறைய நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் செயல்படுகின்றன. பணி ஓய்வு பெற்ற நாய்களை மக்கள் விரும்பினால் வளர்த்துக் கொள்ளலாம். ஆனால் அந்த நாய்களை வளர்ப்பதற்கு நீங்கள் தகுதியானவரா? என்று ஆராய்ந்த பின்னர் தான் அந்த நாய்களை வளர்க்க முடியும். ராணுவத்தில் உள்ளவர்கள், காவலர்கள் போன்றோர் பணி ஓய்வு பெற்ற நாய்களை சுலபமாக வளர்க்கலாம் என்று சொல்லப்படுகிறது. து*ப்பாக்கி படத்தில் கூட விஜய் இப்படித்தான் கா*யமடைந்த நாய் ஒன்றை தன் வீட்டில் வைத்து வளர்ப்பதைப் போல காட்சிகள் வைத்திருப்பார்கள்.

Share This Story

Written by

Karthick View All Posts