Daily News

ஓவரா பண்ணிட்டாங்க! சீனா மொபைல்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் மத்திய அரசு!

Aug 09 2022 11:42:00 AM

Counterpoint Research படி, 6,000 ரூபாய் ஸ்மார்ட்ஃபோன் பிரிவில் 77 சதவீத பங்களிப்புடன் ஐடெல் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. சீன மொபைல் உற்பத்தியாளர்களுக்கு எதிராக இந்தியா ஏற்கனவே கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மேலும் OPPO, Vivo மற்றும் Xiaomi போன்ற சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் சமீபத்தில் சோதனை நடத்தப்பட்டது. 

Mobile China Product Make In india

OPPO, Vivo India மற்றும் Xiaomi ஆகிய மூன்று சீன மொபைல் நிறுவனங்களால் வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்படும் வழக்குகளை அரசு விசாரித்து வருகிறது.OPPO India, Xiaomi India மற்றும் Vivo India ஆகிய நிறுவனங்களுக்கு வரி ஏய்ப்பு செய்ததற்காக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) நோட்டீஸ் அனுப்பியதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

Mobile China Product Make In india

டிஆர்ஐ நடத்திய விசாரணையின் அடிப்படையில் OPPO மொபைல்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ. 4,403.88 கோடி கேட்டு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, அதே நேரத்தில் சியோமி டெக்னாலஜி இந்தியா மீது ஐந்து சுங்க வரி ஏய்ப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

Mobile China Product Make In india

விவோ மொபைல் இந்தியா பிரைவேட் லிமிடெட் மூலம் சுமார் 2,217 கோடி ரூபாய் சுங்க வரி ஏய்ப்பு செய்துள்ளதாக டிஆர்ஐ கண்டறிந்துள்ளது. இதனால் மலிவு விலையில் விற்பனையாகும் சீன மொபைல்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குறைவான விலையில் விற்கப்படும் அவை உடல் ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் தெரிவித்துள்ளது.