notification 20
Rainforest
பேயின் குரல்வளையை பார்க்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா? மனதை திடப்படுத்திக்கொண்டு வாருங்கள் இது ஒன்னும் அவ்வளவு கொ டூரமாக இல்லை!

உலகின் மிகவும் கம்பீரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக திகழ்கிறது இகுவாசு நீர்வீழ்ச்சி. மிகவும் அழகான இந்த நீர்வீழ்ச்சி பிரபலமான சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இயற்கையின் அதிசயம் என்று வர்ணிக்கப்படும் இகுவாசு அர்ஜென்டினா மற்றும் பிரேசில் நாடுகளின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இகுவாசு என்பதற்கு பெரிய தண்ணீர் என்று அர்த்தம். பெயருக்கு ஏற்றாற்போல மிகப்பெரிய அளவில் காட்சியளிக்கிறது இந்த நீர்வீழ்ச்சி.

Iguazu Falls - Wikipedia

இந்த நீர்வீழ்ச்சி 1.7 மைல் தூரம் வரை நீளம் கொண்டது. இகுவாசு நீர்வீழ்ச்சி மொத்தம் 275 நீர்வீழ்ச்சிகளின் தொகுப்பாக உள்ளது. இதில் அர்ஜென்டினாவில் 220 அருவிகளும், பிரேசிலில் 55 அருவிகளும் காணப்படுகிறது. தண்ணீரின் அளவை பொறுத்து இந்த எண்ணிக்கை சில நேரங்களில் மாறுபட்டு 300 நீர்வீழ்ச்சிகள் வரை கூட செல்லும்.

Why You Should Visit Iguazu Falls on Argentina's Side | Wanderlust

நீண்ட காலத்திற்கு முன் எரிமலை வெடிப்பின் காரணமாக இந்த நீர்வீழ்ச்சி உருவாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. நயாகரா நீர்வீழ்ச்சியை காட்டிலும் இகுவாசு உயரமாக இருக்கிறது. இது 269 அடி உயரத்தில் இருந்து வீழ்கிறது. மேலும் நயகராவை விட இரண்டு மடங்கு அகலமாகவும் காணப்படுகிறது. இகுவாசுவின் அகலம் 8858 அடியாகும். நயாகராவுக்கு அடுத்தபடியாக அதிக நீரோட்டமுள்ள அருவியாக இருக்கும் இகுவாசுவில் நொடிக்கு 62,000 கன அடி நீர் பாய்ந்தோடுகிறது. மழைக்காலங்களில் இந்த நீர்வீழ்ச்சியின் நீர் வரத்து 4,50,000 கன அடி வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Visiting Iguazu Falls in Brazil with Kids - YouTube

இந்த நீர்வீழ்ச்சியை பார்ப்பதற்கு ஏற்ற காலம் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டமாகும். இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து பெறப்படும் மின்சார சக்தியானது பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவுக்கு தேவையான மின்சாரத்தில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது.

Iguazú Falls - The World's Largest Waterfalls | Argentina Tour

இகுவாசுவின் அருவித்தொகுப்பில் பேயின் குரல்வளை என்ற அழகான இடம் ஒன்று உள்ளது. யு வடிவத்தில் காணப்படும் இந்த அருவியானது  14 கிளை அருவிகளை கொண்டுள்ளது. பேயின் குரல்வளையானது 82 மீட்டர் உயரமும், 150 மீட்டர் அகலமும், 700 மீட்டர் நீளமும் கொண்டுள்ளது. இகுவாசுவின் நீரோட்டத்தில் பாதியை பேயின் குரல்வளையே பெறுகிறது. இங்கு அடிக்கும் சாரலானது 500 அடியை தாண்டி விழும் என்று கூறப்படுகிறது.

How to get to Iguazu Falls, what to see in Argentina and Brazil, guide to  Iguazu Falls | escape.com.au

இந்த நீர்வீழ்ச்சியை சுற்றி ஒரு பெரிய மழைக்காடு அமைந்துள்ளது. இதில் 2000 வகையான தாவரங்களும், 66 வகையான பாலூட்டிகளும், 436 பறவையினங்களும் மற்றும் பல ஜீவராசிகளும் வாழ்கின்றன. இந்த நீர்வீழ்ச்சியை உலக பாரம்பரிய இடங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.

 

 

 

 

Share This Story

Written by

Gowtham View All Posts