Daily News

அடுத்த சாதனைக்கு தயாராகும் துபாய்! அமெரிக்காவுக்கே டப் கொடுக்கும் மாஸ்டர் பிளான்! குட்டி நாடாக இருந்தாலும் கெத்து காட்டுறாங்களே!

Nov 25 2022 03:20:00 AM

வடிவேலு காலத்தில் இருந்தே துபாய்க்கு செல்ல வேண்டும், பணக்கார வாழ்க்கை வாழவேண்டும் என்ற ஆசை பெரும்பலானோருக்கு இருக்கிறது. இதனால் கடன் வாங்கியாவது துபாய்க்கு சென்றுவிடவேண்டும் என்ற எண்ணம் எழுவதில் எந்தவித ஆச்சர்யமும் இல்லை என்றே கூறலாம். அந்த அளவுக்கு துபாய் வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது.

dubai hyper tower

இதனை இன்னும் சிறப்பிக்கும்வகையில் தற்போது துபாயில் கட்டப்பட்டு வரும் ஒரு விஷயம் இணையத்தில் வைரலாக வளம் வந்துகொண்டு இருக்கிறது. உலகின் உயரமான கட்டிடம் என்று வர்ணிக்கப்படும் புர்ஜ் கலிபா (2716 அடி) துபாயில் இருப்பது அனைவரும் அறிந்தது தான். இது வணிக பயன்பாடுகளுக்காக கட்டப்பட்டு உலகின் அதிக அளவிலான பிசினஸ் துபாயில் நடைபெற காரணமாக அமைந்தது

dubai hyper tower

உலகின் அதிக உயரம் கொண்ட குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணியில் துபாய் ஈடுபட்டு வருகிறது. தற்போதய நிலையில் அமெரிக்காவில் இருக்கும் சென்ட்ரல் பார்க் டவர் (1550 அடி) தான் உலகில் அதிக உயரம் கொண்ட குடியிருப்பு கட்டிடமாக இருக்கிறது. இது நியூயார்க்கில் அமைந்துள்ளது. இதனை முறியடிக்கும் விதமாக தற்போது துபாயில் "ஹைபர் டவர்" என்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறதாம். இது 100 மாடிகளை கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படும் நிலையில் இதன் உயரம் எவ்வளவு இருக்கும் என்று இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை