பாகம் 1 : https://www.sevvey.com/blog/husbend-wife-fights
(தொடர்ச்சி...)
சரிக்கா இன்னிக்கி நாங்க குடும்பத்தோட பார்க்குக்கு போலாம்ன்னு இருக்கோம். உங்க பையன கூட்டிகிட்டு போயிட்டு வரோம். அவன் வரலைன்னா எங்க பையன கட்டி மேய்க்க கஷ்டமா இருக்கும்ன்னு சொன்னேன். அவங்களும் சரின்னு சொல்லி அவங்க பையன ரெடி பண்ணி எங்ககூட அனுப்பினாங்க. போய்ட்டு சாயங்காலமா வீட்டுக்கு வந்தோம். நடுவுல எப்படியும் அவங்க கிட்ட இருந்து ஒரு 20 போன் காலாச்சும் வந்திருக்கும். அவங்க பையன வீட்டுக்கு கொண்டி விட்டுட்டு அவங்க ரெண்டு பேத்தயும் உக்காரவெச்சி பேச தொடங்கினேன்.
இங்க பாருங்க அக்கா, நாங்க ஒன்னும் வெளியாள் இல்ல. உங்க பக்கத்து வீட்டுல தான் இருக்கோம். இந்த ஏரியாவுல 20 வருசமா இருக்கோம். அதுவும் சொந்த வீட்டுல தான் இருக்கோம். அப்படி உங்க பையன பாத்துக்காம விட்டுடமாட்டோம். ஆனா நீங்க எதுக்கு 20 தடவை போன் பண்ணீங்கன்னு கேட்டேன். உடனே அவங்க கோ வமாக, அது எப்படிங்க, என்னோட பையன உங்க கூட அனுப்பிட்டு இங்க நிம்மதியா இருக்க முடியும்? அவன் சாப்பிட்டானா இல்லையா என்று நான் தெரிஞ்சிக்கக்கூடாதா என்று பதில் சொன்னாங்க. சரிங்கக்கா, நீங்க கால் பண்ணறப்ப நான் பேச மாட்டேன்னு சொன்னா என்ன செய்வீங்கன்னு நான் கேட்க, அவங்களுக்கு ரொம்ப கோ வம் வந்துருச்சி.
உங்கள நம்பி தான அனுப்பி வெச்சிருக்கோம். அதெப்படிங்க, என்னோட பையன பத்தி கேட்டா நீங்க எதுவம் சொல்லாம இருப்பீங்க? கொஞ்சம் மனசாட்சியோட பேசுங்க. நான் உங்கள கூட்டிகிட்டு போங்கன்னு சொல்லலையே, நீங்களா தான வந்து கூட்டிகிட்டு போனீங்கன்னு கோ வமா பேச ஆரம்பிச்சாங்க. அக்கா கொஞ்சம் ரிலாக்ஸ்! ஏன் இவ்வளவு கோவப்படறீங்க? நிதானமா இருங்கன்னு உக்கார வெச்சேன். உங்க பையனுக்கு என்ன வயசு ஆகுதுன்னு அந்த அண்ணன் கிட்ட கேட்டேன். 11 வயசுன்னு சொன்னாரு. 10 தாங்க முடிஞ்சிருக்கு, 11 நடந்துகிட்டு இருக்குன்னு அந்த அக்கா சொன்னாங்க.
சரிக்கா, 10 வருஷம் பெத்து வளத்தின உங்களுக்கே இவ்வளவு கோ வம் வந்தா, உங்களுக்கு கல்யாணம் ஆகறப்ப எப்படியும் அண்ணனுக்கு 25-27 வயசாச்சும் இருந்திருக்கும். இப்ப 37 வயசுன்னு வெச்சிகிட்டா கூட அவங்க அம்மா அவர 37 வருஷம் கண்ணுலயும், 10 மாசம் வயித்துலயும் வெச்சி வளத்திருக்காங்க. அவங்களுக்கு கோ வமே வராதா? அவங்க யாரை நம்பி உங்க புருஷன அனுப்பி வெச்சாங்க? உங்கள நம்பி தான? அப்ப அவங்களுக்கு யாரு பதில் சொல்லணும்? நீங்க தான? ஆனா நீங்க உங்க பொறுப்பை மறந்து நீங்க சரியா இருக்கறமாதிரி பேசறீங்க இது கரெக்டா?
ஒரு நாள் நீங்க உங்க பையன எங்க கூட அனுப்பினதுக்கே இவ்வளவு துடிக்கிறீங்கன்னா அவர பெத்தவங்க நிலைமையை அவங்க இடத்துல இருந்து கொஞ்சம் யோசிச்சி பாருங்க. அவரு நல்லா இருந்தா தான் பெத்தவங்க மனசு சந்தோசமா இருக்கும். அப்படி சந்தோஷமா இருந்தாலும், அவங்க மனசு புள்ளைங்கள சுத்தி சுத்தி தான் வரும். உங்க அண்ணன் வரப்ப எப்படி உங்களுக்கு சந்தோசமா இருக்கோ, அது மாதிரி தான் அவங்க அம்மா கிட்ட பேசினா அவருக்கும் ஓரு சந்தோசம்.
உங்க பீலிங் கரெக்ட்னா, அவரை மட்டும் எப்படி தப்புன்னு சொல்லறீங்க? தாய்ப்பாசம் அப்படிங்கறது எல்லா தாய்க்குமே ஒன்னு தான். அத புரிஞ்சிக்கோங்கன்னு சொல்ல, அவங்ககிட்ட இருந்து எந்த பேச்சும் வரல. அதே மாதிரி அண்ணா, நீங்களும் அக்காவுக்கு புரியறமாதிரி எடுத்துச்சொல்லுங்க. தேவையில்லாம அவங்க மேல கோ வப்படாதிங்க. அவர்களும் உங்கள நம்பி தான வாழ வந்திருக்காங்க, ஒத்துமையா இருங்கன்னு சொன்னேன். இருவரும் சமாதானம் ஆன மாதிரி தோனுச்சு. அப்புறம் என்ன, குக்கர் கூப்பிட அந்த அக்கா கிளம்பிட்டாங்க. பாக்கலாம் ஏதாவது மாற்றம் தெரியுதான்னு.