ஒரு பெண் முறையற்ற உறவில் ஈடுபடுகிறாள் என்ற செய்தியை பார்த்த உடனே, அவளுக்கு என்ன அப்படி உடல் சுகம் வேண்டி கேட்குது? அவள் எல்லாம் நல்ல குடும்பத்தில் பிறந்தவளா என அவளுடைய பெற்றோர் வரைக்கும் சம்பந்தப்படுத்தி ஏசுறாங்க. கொஞ்சம் காது கொடுத்து அவளுக்கு என்ன நடந்தது என்பதை விசாரிக்க ஒருத்தரும் முன்வருவதில்லை. நூத்துக்கு 10 சதவிகித பெண்கள் மட்டுமே, என்ன சொன்னாலும் திருந்தாத ஓடுகாலிகளாக இருப்பார்கள். மீதி 90 சதவிகிதம் சந்தர்ப்ப சூழ்நிலையால் முறையற்ற உறவில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள்.
எனக்கு தெரிந்தே நண்பன் ஒருவன், வீடியோவை காட்டி காட்டி மனைவியும் அதே போல நடந்துகொள்ள வேண்டும் என மிருகம் மாதிரி நடத்தினான். ஒரே வருடத்தில் அந்த பெண் தன்னுடைய முன்னாள் காதலனோடு ஓடிவிட்டாள். வெளி உலகிற்கு அவள் ஓடியது மட்டும் தான் தெரியும். வீட்டுக்குள் அவன் என்ன செய்தான் என்பது, என்னைப்போன்ற ஒரு சிலருக்கே தெரியும். எதனையும் முழுமையாக அறிந்துகொள்ளாமல் ஒருவர் மீது குறை செல்லக்கூடாது. முடிந்த வரையில் ஒரு சில செயல்களை செய்வது மூலம், பெண்கள் முறையற்ற உறவில் நுழைவதை தடுக்கலாம். அதற்கான சில வழிமுறைகளை பார்போம்.
1.இளம்விதவை பெண்களை அதுவே அவங்க தலையெழுத்து என அப்படியே விட்டுவிடக்கூடாது. தயவு செய்து எடுத்துச்சொல்லி மறுமணம் செய்து வைக்க வேண்டும்.
2. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் 30 வயதிற்கு மேல் திருமணத்தை தள்ளிப்போடக்கூடாது. ஏக்கமே தவறான வழியில் தள்ளிவிடும்.
3. 40லிருந்து 45 வயதிற்கு மேல் திருமணம் செய்யும் அங்கிள்ஸ் அவங்க வயதைவிட கொஞ்சம் குறைச்சோ, கூடுதலோ இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள். சிறு வயது பெண்ணின் வாழ்வை சீரழிக்க வேண்டாம்.
4.திருமணம் முடிந்த உடனே வெளிநாடு வேலைக்கு செல்லும் ஆண்கள் சற்று யோசிக்க வேண்டும்.
5. ஒருமுறை சுவையான உணவை ருசித்த வாய், மீண்டும் சாப்பிட ஏங்குமா? ஏங்காதா? அந்த எதிர்பார்ப்பும் ஒரு பெண்ணை வேறு வழிக்கு கொண்டு சென்றுவிடும்.