notification 20
Rainforest
திரும்ப திரும்ப செலவு வைக்காத மாதிரி, UPS தேர்ந்தெடுப்பது எப்படி? 20 ஆயிரம் கொடுத்து வாங்கும் இடத்தில், இதெல்லாம் யோசிக்கணும்! எங்க வீட்டுக்கு நான் பயன்படுத்திய ட்ரிக் சொல்றேன்!

பவர்கட் இருந்தாலும், இல்லாவிட்டாலும் புதுசா வீடு கட்டின  உடனே, UPS வாங்கி பொறுத்தும் பழக்கம் உண்டாகிருச்சு. சொந்தக்காரங்க சொல்றாங்க, பக்கத்துவீட்டுக்காரங்க சொல்றாங்கன்னு கண்ட கண்ட பேட்டரி வாங்கி பொருத்தினால், இரண்டே வருடத்தில் மீண்டும் மீண்டும் செலவு வைக்கும். நம்ம வீட்டு சைஸ்சிற்கு என்ன தேவையோ, அதற்கு ஏற்ப கணக்கு போட்டு தரமான UPS தயாரிப்பா பார்த்து வாங்கணும். எங்க வீட்டில் முதல் முறை வாங்கிய பேட்டரி 6 வருடங்கள் உழைத்தது. 

அதற்கு பிறகு மாற்றிய பேட்டரி நான்கு வருடங்களை கடந்தும் நல்ல நிலையில் இருக்கு. அதற்கு காரணம், முறையான பராமரிப்பும் தேவை அறிந்து வாங்கியதுதான். நம்ம வீட்டில் இருக்க ஒவ்வொரு மின்சார சாதனத்துக்கும் ஒரு வாட்ஸ் அளவு இருக்கும். இப்போ டியூப் லைட் 40 வாட்ஸ் என்றால் வீடு முழுக்க 6 லைட் இருந்தால், 240  வாட்ஸ் வரும். அதே மாதிரி ஸ்பேன், மிக்சி, பிரிட்ஜ் எல்லாம் கணக்கு போட்டு பாருங்க. எல்லாம் சேர்ந்து ஒரு 300 வாட்ஸ் வருதுன்னு வையுங்க. அதைவிட மூன்று மடங்கு திறன் கொண்ட பேட்டரி UPS வாங்க வேண்டும். 

அதாவது 1 kva அல்லது 1000 வாட்ஸ் என்று சொல்வாங்க. அதைய விட்டுட்டு 600 வாட்ஸ் அளவில் எல்லாம் வாங்கினால், சீக்கிரம் சீக்கிரம் செலவு வைக்கும். பேட்டரி மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். வாரண்டி சிறந்த முறையில் கொடுக்கும் கம்பெனியா பார்த்து வாங்கணும். LUMINOUS, microtek கம்பெனி நல்லா இருக்கு. பேட்டரியில் Exide பேட்டரி தரமானதாக இருக்கும். தொடர்ந்து சில நாட்களுக்கு வீட்டை பூட்டி விட்டு வெளியூர் போவதானாலும் இன்வெர்டருக்கு மின்சாரம் வந்து கொண்டு இருக்கவேண்டும்.

சுட்ச் ஆஃப் செய்யக்கூடாது. அப்படி செய்தால் பாட்டரி ஆயுள் குறைந்து விடும். தேவைக்கான அளவை விட இன்வர்டர் பாக்ஸ் கொஞ்சம் அதிக கெபாசிட்டி இருப்பதாக பார்த்து வாங்கினால் சூடாகாது. நீண்ட வருடங்கள் உழைக்கும். இனி ஏனோ தானோன்னு வாங்காமல், உங்க வீட்டில் எவ்வளோ மின் சாதனங்கள் இருக்குன்னு கணக்கு போட்டு பார்த்துட்டு வாங்கினால் செலவு மிச்சம். 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts