ஆண்களின் வேலை, வீடு, பழக்க வழக்கங்களைத் தூண்டித்துருவி ஆராயும் வழக்கம், எல்லா காலங்களிலும் உண்டு. ஆனால் மாப்பிள்ளை தேடும் பெண் வீட்டார் இப்போ கொஞ்சம் ஓவரா போகிற மாதிரி தெரியுது. நான் பார்க்கிற பெரும்பாலான பெண்களின் வீடுகளில், பொண்ணு ஏதோ டிகிரி வாங்கியிருக்கும். வேலைக்கு போகாது. சமைக்கத் தெரியாது. அவங்களிடம் வரதட்சனை கேக்கக்கூடாது. மாப்பிள்ளை 50 ஆயிரம் சம்பாதிக்கணும். மாடி வீடு இருக்கணும். விசாரிக்க ஆரம்பிச்ச உடனே இதெயெல்லாம் கேட்கிறாங்க. அரசு வேலையில் அல்லது வசதியான மாப்பிள்ளைதான் வேண்டும் என அலையும் பாதி பெண்களின் தந்தைமார்கள் கூலி வேலை செய்பவர்கள். அதிலும் பலர் பரம்பரை குடிகாரர்கள், அவர்களின் உடன் பிறந்தவர்கள் சரியான வேலை கிடைக்காமல் தந்தையின் வருமானத்தில் காலம் தள்ளுபவர்கள்.
சொந்தமாக பங்களா மற்றும் இதர சொத்துக்கள் உள்ள மாப்பிள்ளை வேண்டும் என கேட்கும் பெரும்பாலான பெண் வீட்டார் வாடகை வீட்டில் தான் வசிக்கின்றனர். வரதட்சணை பாவம் என சொல்லும் பெண்களும், மணமகனின் வசதி வாய்ப்புகளை அளவிட்டே பெண்பார்க்கும் படலத்திற்கு சம்மதிகின்றனர். மாப்பிள்ளை பெண்ணை பார்த்து விட்டு சென்றபின் இதைவிட வசதியான, வரதட்சணை கேட்காத இளிச்சவாயன் கிடைத்தால், நாகரீகமே இல்லாமல் அங்கு தாவிவிடுவார்கள். தற்போது பெண்வீட்டார் வெளிப்படையாக வரதட்சணை தர முடியாது என கறார் காட்டுகின்றனர். ஆனால் மணமகன் பணக்காரனாக இருக்க வேண்டுமாம்.
"சரி வரதட்சணை வேண்டாம் பெண்ணை மட்டும் கொடுங்கள்" என ஒரு நடுத்தர குடும்பத்து ஆண் பெண்கேட்டால், அவனுக்கு ஏதோ குறை என கதைகட்டிவிடுகின்றனர். உண்மையில் இவர்கள் பிரச்சனை, அந்த நடுத்தர குடும்பத்து ஆணின் பொருளாதார நிலை பிடிக்கவில்லை. அதை சொல்லாமல், அவனுக்கு குறை இருக்கு என நழுவிவிடுவார்கள். வசதியான மணமகனை தேடி அலையும் போது,வசதியான மாப்பிள்ளை வீட்டார், அவர்கள் வசதி வாய்ப்புகளுக்கேற்ப வரதட்சணையை கேட்பர். அப்போது வரதட்சணை பாவம், சட்டப்படி தவறு என காதில் பூ சுற்றுவார்கள்.
பணக்காரன் மருமகனா வேணும், ஆனா ஒரு பைசா செலவு செய்யாம ஓசியில நம்ம மகள் வசதியா வாழணும் என்கிற மனநிலையை என்ன சொல்வது? உண்மையில் தற்போது பல பெண்கள் 30 வயதுக்கு மேலும் பெண்ணியம் பேசிக்கொண்டு, வரதட்சணை தவறு என்று கதைகட்டிக்கொண்டு திருமணமாகாமல் இருப்பதற்கு, இதுபோன்ற பேராசைகளே காரணமாகும். ஒரு சில பெண்களுக்கு விதிவிலக்காக, பைசா செலவில்லாமல் வசதியான மணமகன் கிடப்பான். அதே மாதிரி பகல் கனவு கண்டு எதிர்பார்க்கும் எல்லா பெண்களுக்கும் அப்படி அமையாது.