maybemaynot
notification 20
Misc
#mixer: தினமும் மிக்சியில் ஆட்டி குழம்பு வைக்கும் முன் கவனிக்க வேண்டியது! வெறும் சக்கையை மட்டும் தான் உண்டு கொண்டிருக்கிறோமா?

அறிவியல் ரீதியாக பார்க்கும் போது, மிக்சியில் உணவு பொருட்கள் அதிக வெப்பநிலையில் பிளவுபடுகிறது. அங்கேயே பொருளின் மணமும் சுவையும் மாறுபடும். ஒருமுறை ஆட்டுக்கல்லில் ஆட்டி குழம்பு வைத்தும் மிக்சியில் ஆட்டியதையும் ஒப்பிட்டு பாருங்கள். சுவை, மணம், கெட்டு போகும் தன்மை எல்லாமே வேறுபடும். ஆட்டுக்கல்லில் ஆட்டிய உணவு பதார்த்தத்தை குளிர்சாதன பெட்டியில் வைக்காமலே நாள் முழுவதும் கெட்டு போகாமல் இருக்கும். ஆனால் மிக்சி என்றால் மதியமே கெட்டுவிடும்.

நாம் அம்மியில் ஆட்டும் போது, மிக்சியில் உருவாவது போல வெப்பம் உண்டாவதில்லை. சாதாரணமாக உணவு பொருட்களை வறுத்து அரைக்கும் முன்னர் சில நேரம் ஆறவைக்க சொல்வார்கள். அப்படியே வெப்பத்தோடு அரைத்தால் மிக்சியும் பாதிக்கப்படும் வெப்பத்தால் சத்துக்களும் உடைந்து போகும். இல்லத்தரசிகள் கவலை படுவதெல்லாம் சூடாக அரைத்தால் மிக்சி விரைவில் பழுதாகிவிடும் என்பது மட்டுமே! 

அரைப்பதற்கும் வெட்டப்படுவதற்கும் வித்தியாசம் உண்டு. மிக்சியில் பொருட்கள் அரைக்கப்படுவதில்லை மிகவேகமாக வெட்டப்படுகிறது. அம்மியில் உணவு பொருட்களை நசுக்கப்படுகிறது. நசுக்கினால் என்ன? வெட்டினால் என்ன? குழம்பு ஆச்சா இல்லையா? நமது நோக்கம் குழம்பு அம்புட்டுதான் என இருந்து விட கூடாது. ஏனெனில் குழம்பு மட்டும் முக்கியமல்ல ஆரோக்கியமும் தான் இதில் அடங்கும். மேலும் மிக்சியின் பயன்பாட்டினால் உண்டாகும் வெப்பமானது அம்மியைவிட மிக அதிகம். எவ்ளோ வேகமாக அம்மி அல்லது ஆட்டுக்கல்லை பயன்படுத்தினாலும் மிக்சிக்கு ஈடாக வெப்பம் உருவாக போவதில்லை. 

மிக்சியில் அரைப்பதற்கும் அம்மியில் அரைப்பதற்கும் ருசியிலும் வேறுபாடு உண்டு சத்திலும் வேறுபாடு உண்டு. ருசி சரிதான், அது எப்படி உணவு பொருளின் சத்திலும் வேறுபடும் என்றால் சில வைட்டமின்கள் (B, C) போன்றவை உள்ள காய்கறிகள் நீரில் கழுவும் போது அதில் உள்ள வைட்டமின்கள் நீரில் கரையும். இதனாலே வைட்டமின் B மற்றும் C உள்ள காய்கறிகளை கழுவ கூடாது என்பார்கள். அதே போல்தான் உணவில் சத்துக்களும் மிக்சியில் வெட்டப்படும் போது காணமல் போகும்.

மிக்சியிலோ கிரைண்டரிலோ ஆட்டும் போது உடலுக்கு எந்த வித வேலையும் கிடையாது. ஆனால் அம்மியிலோ ஆட்டு கல்லிலோ ஆட்டும் போது உடலில் உள்ள எல்லா தசைகளும் இயங்கி  உடல் புத்துணர்வு பெறும். அம்மியிலோ ஆட்டு கல்லிலோ ஆட்டுவது டபுள் லாபம் தான். 
அம்மியில் அரைத்த குழம்பை உண்பதால் உணவின் சத்துக்களும் பாதுகாக்கப்படுகிறது மேலும் உடலுக்கும் பெரிய பயிற்சி. தனியாக நேரம் செலவு செய்து ஜிம்மிற்கு போக வேண்டிய அவசியமும் இல்லை. 

இதன் பின் உள்ளே உள்ள இன்னொரு விஷயம், சத்து நிறைந்த உணவு உண்டால் உடலில் உள்ள அமினோ அமிலம் உடல் எடையை கூட்டாமல் பாதுகாக்கும். சத்தையெல்லாம் வீணடித்துவிட்டு வெறும் சக்கையை மட்டும் உண்டால், உடல் எடை கூடிக்கொண்டு தான் போகும். அம்மிக்கல், ஆட்டுக்கல் உபயோகித்தால் மட்டும் உடல் எடை குறையுமா என கிளம்பி விடாதீர்கள் அவற்றை பயன்படுத்த ஆரம்பித்தால் அதுவும் உடல் எடை குறைய ஒரு காரணமாக அமையும்.  'அம்மியில் சட்னி அரை, ஆட்டுக்கல்லில் மாவு அரை உடம்பும் குறையும்! ஆரோக்கியமும் மேம்படும்' என்பதே இன்றைய கால கட்டத்தில் நாம் பின்பற்ற வேண்டிய பழமொழி. சாத்தியமா தெரியவில்லை. 

Share This Story

Written by

AP View All Posts