maybemaynot
notification 20
Daily News
பீடா வாயன்களின் போலி வெப்சைட்டில் இருந்து எப்படி தப்பிக்கலாம்? செல்போன் கொடுக்கிறேன் என்று செங்கல் அனுப்பி வைப்பாங்க!

அமேசான் அல்லது பிளிப்கார்ட் போன்ற வழக்கமான இணையதளத்தை தாண்டி வேறு எதிலாவது பொருள் வாங்க திட்டமிட்டால், Scam Advisor என்ற மோசடி குறித்த இணையதளத்தைப் பயன்படுத்தி அவர்களின் நற்பெயரைச் சரிபார்க்கலாம். இந்த இணையதளம் இணையதளத்தைப் பற்றிய தகவல்களை அதன் மதிப்பெண் உட்பட உங்களுக்கு வழங்கும். 

ஆன்லைன் ஸ்டோரிலிருந்து எது வாங்குவதாக இருந்தாலும் ஒரு சிலவற்றை சாரி பார்க்கணும். அந்த இணையதளம் பதிவு செய்து இருக்க வேண்டும். இ-மெயில் அந்த கடையின் பெயரில் இருக்க வேண்டும். வாடிக்கையாளர் சேவை மைய போன் நம்பர் இருக்க வேண்டும். அலுவலக முகவரி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இது எல்லாமே இருந்தாலும், ரிவியூ நல்லா இருக்கா என்று பார்க்கணும். எதுவும் தெரியாமல் பணத்தை கட்டி ஏமாறுபவர்களே இங்கே அதிகம். 

பொருள் வாங்கிய பிறகு காசு கொடுக்கும் ஆப்ஷன் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். முன் கூட்டியே பணம் பெற்றுக்கொண்டு தான் பொருள் தருவார்கள் என்றால், அவசரப்பட்டு பணம் செலுத்தவே கூடாது. இதற்கு முன்னர் எத்தனை பேர் அதில் பொருள் வாங்கி இருக்காங்க என்பதை அலசி ஆராய வேண்டும். எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றால், அப்படியே அந்த வெப்சைட்டை மூடிவிட்டு வந்திடலாம். மேலும் சோதிக்க இந்த வெப்சைட்டை பார்க்கலாம். Click Here

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts