notification 20
Shoreline
சாமிக்கு தேங்காய் உடைப்பதில், தெய்வ குத்தம் ஆகாமல் எப்படி தப்பிக்கலாம்? கடைக்காரர் கையே காட்டிக் கொடுக்கும் அறிகுறி! அர்ச்சகர் சொன்ன சிம்பிள் லாஜிக்!

கோவிலில் தேங்காய் உடைப்பது மக்கள் சென்டிமென்டோடு நெருங்கிய தொடர்புடையது. நல்ல காரியம் நடைபெற வேண்டி தேங்காய் உடைக்கும் போது, அழுகியதாக வந்துவிட்டால், மனசே கேட்காது. அந்த காரியம் என்ன ஆகப்போகுதோ? ஏது ஆகப்போகுதோன்னு மனசு அடிச்சுக்கும். டெங்கு காய்ச்சல் பரவிக்கொண்டிருந்த நேரம், குலதெய்வ கோவிலுக்கு போயிருந்தோம். பெரியப்பா வீடும் எங்களுடனே வந்திருந்தாங்க. இரண்டு குடும்பமும் அர்ச்சனைக்கு தேங்காய் உடைக்கும் போது, பெரியப்பா கொடுத்த தேங்காய் அழுகிப்போயிருந்தது. 

சாமி கும்பிட்டு வந்து ஒரு மாதம் கழித்து அவருக்கு அட்டாக். சீக்கிரமே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய் காப்பாத்திட்டோம். அதற்குப் பிறகு எந்த கோவிலுக்கு போனாலும், தேங்காய் நல்ல படியா உடையணும் என்று வேண்டிக்குவேன். இப்போ வரைக்கும் எந்த கெட்ட சம்பவமும் நடக்கவில்லை. இனிமேலும் நடக்கக்கூடாது என்பதே எனது எண்ணம். இதெல்லாம் மூடநம்பிக்கை என ஒரு சிலர் சொன்னாலும், எனக்கு இந்த நம்பிக்கை நேர்மறையான எண்ணங்களை கொடுக்கிறது. அது ஆன்மீக வழியில் வந்தால் என்ன, அடுத்தவர் அட்வைஸ்சில் வந்தால் என்ன? மனசு இழகுவானால் போதும். 

தெய்வ வழிபாட்டின் போது, முடிந்த வரையில் நல்ல தேங்காயாக பார்த்து வாங்கி வர வேண்டும். அதற்கு கோவில் அர்ச்சகர் சிம்பிளான சில லாஜிக் சொல்லிக்கொடுத்தார்.தேங்காயை எடுத்தவுடன் லேசாகத்தட்டினாலே நல்ல ஓசை கேட்கும் தேங்காய், நல்ல தேங்காயாகும். அதற்குப் பிறகு தேங்காயை ஆட்டி பார்க்கும் பொழுது உள்ளே நிறைய தண்ணீர் இருக்க வேண்டும். வெளிப்புறப் பகுதிகளில் ஈரம் இருக்கக் கூடாது, விரிசல் இருக்கக் கூடாது.

ஓட்டுப் பகுதியில் விரிசல்கள் லேசாக இருந்தாலும் அந்த தேங்காயை வாங்க வேண்டாம். தேங்காய் சற்று அடர்த்தியான நிறத்தில் இருந்தால் நல்ல முற்றிய காயாக இருக்கும். கூடிய வரையில் நேராக இருக்கும் தேங்காய்கள் ஈரப்பசையில்லாமல் கருப்பு படியாமல் இருந்தால் நல்லதாகவே இருக்கும். இதெல்லாம் பார்த்து வாங்கத்தெரியாவிட்டால், அபிஷேகம் செய்ய நீங்களே ஒரு நல்ல தேங்காய் கொடுங்கன்னு கடையில் கேட்டால், நிச்சயம் அவங்க நல்ல தேங்காய் தான் எடுத்துக் கொடுப்பாங்க. அவங்க கண்ணுக்கு கெட்ட தேங்காய் இருப்பது தெரிந்தாலும், நாம் அப்படி சொன்னவுடன் நல்ல தேங்காய் எடுக்கவே அவங்களுக்கு கை போகும். அடுத்த முறை கோவிலுக்கு செல்லும் போது முயற்சித்துப் பாருங்கள். 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts