என்னுடைய உறவினர் ஒருவருடைய மருமகள் இன்னொருவனுடன் தொடர்பு ஏற்பட்டு ஓடி போய்விட்டாள். அவளை கண்டுபிடித்து, மீண்டும் சேர்ந்து வாழ அழைத்தும், வர மறுக்கிறாள். சரி உறவினருடைய மகனாவது இன்னொரு நல்ல வாழ்க்கையை தேடிக்கொள்ளட்டுமென விவாகரத்து கேட்டால், சொத்தில் பாதி பங்கு கொடுத்தால் தான் விவாகரத்துக்கு உடன்படுவாளாம். ஓடிப் போனவளுக்கு என்ன சொத்தில் பங்கு கொடுக்க வேண்டிக்கிடக்கு? முடிந்த வரையில் காசு கறக்க திட்டமிட்டுவிட்டாள். சட்டமும் பெண்களுக்கு சாதகமாக இருப்பதால், என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தனர்.
இந்த மாதிரி சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, நமக்கு நிதானம் ரொம்ப முக்கியம். இந்த விவகாரத்தில் சூட்டோடு சூடாக முடிவுகளை எடுக்கத்தவறினால், விளைவுகள் விபரீதமாகி விடும். குடும்ப கௌரவம் என தயங்கித் தயங்கி எதையுமே செய்யாமல் இருந்துவிட்டால், மொத்த சொத்தையும் மொட்டையடித்து தெருவில் உட்கார வைத்து விடுவார்கள். அதற்கு முன்னால் நல்ல ஒரு வக்கீலாக பார்த்து, ஓடிப்போனவளிடமிருந்து விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கும் முயற்சியில் இறங்க வேண்டும். ஓடிப்போன பெண்ணின் பிறந்த வீட்டில் உள்ளவர்களையும் சாட்சி போட ஏற்பாடுகள் செய்துகொள்ள வேண்டும்.
பெரும்பாலான பெண் வீட்டில், இதையெல்லாம் ஏற்கவே மாட்டார்கள். அவர்களும் ஓடிப்போன பெண்ணுக்கு சாதகமாக செயல்பட்டால், அவர்கள் மீது ஒரு புகார் பதிவு செய்ய வேண்டும். அந்த பெண்ணிற்கு குழந்தைகள் இருந்தால், குழந்தைகள் தந்தையோடு தான் வாழ விருப்பம் என்ற உறுதி மொழிப்பத்திரம் ஏற்பாடு செய்யணும். குழந்தை, ஓடிப் போன பெண்ணோடு இருப்பது, அவர்களுடைய எதிர்காலத்துக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே அது கைக்குழந்தையாக இருந்தாலும், உங்கள் பொறுப்பில் கொண்டு வர வேண்டியது மிக முக்கிய கடமையாகும்.
பெரும்பாலான ஆண்கள் வீட்டில் வெளியே தெரிந்துவிடுமோ என தயங்கித்தயங்கி ஒவ்வொன்றையும் செய்வதற்குள், பெண்கள் தரப்பு உஷாராகி செய்ய வேண்டியதை செய்து முடித்துவிடுகின்றனர். எவ்வளோக்கு எவ்வளோ இந்த விவகாரத்தில் சீக்கிரம் முடிவு எடுக்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது. ஓடிப்போன பெண்ணுக்கு எதிராக எல்லா ஆதாரங்களையும் திரட்டி, அதனை நல்ல வக்கீல் வைத்து அணுகினால், உங்க சொத்தில் இருந்து துளி பைசா கூட வாங்க முடியாது. விவாகரத்து கொடுக்கும் பல ஆண்கள், ஜீவனம்சம் என்ற ஒன்றுக்கு பயந்தே நிம்மதியை இழந்து விடுகின்றனர். தப்பு பண்ணிட்டு ஓடிய பெண்ணுக்கு எங்கேயும் ஜீவனாம்சம் கொடுக்க மாட்டார்கள்.