Lushgreen

"நம்ம ரெண்டு பேரும் தனியா இருக்கலாம் வா" கல்லூரி மாணவிக்கு வாத்தியார் அனுப்பிய மெசேஜ்! இரவு 9.30 மணிக்கு மேல் சின்ராசா கையில பிடிக்க முடியாது!

Sep 29 2021 02:53:00 PM

மெத்தப்படித்த ஆட்களுக்கே சோஷியல் மீடியாவை எப்படி பயன்படுத்துவதென தெரியாவிட்டால், சாமானிய மக்கள் எப்படி பயன்படுத்துவாங்கன்னு யோசிச்சுப்பாருங்க. ஒரு பெண்ணிடம் அத்துமீறி மெசேஜ் அனுப்பும் ஒருவர் கூட, தன்னுடைய அடையாளமும் அங்கு வெளிப்படுகிறது. எப்படியும் நாம் சமுதாயத்தில் வெளிச்சம் போட்டு காட்டப்படப்போகிறோம் என்பதை உணருவதில்லை. இப்போ ஒரு பெண்ணுக்கு ஒரு கல்லூரி மாணவர், தப்பு தப்பா மெசேஜ் அனுப்புறாங்கன்னு வைத்துக்கொள்வோம்.

coimbatore college college-girl

யார் அனுப்புறாங்கன்னு மட்டும் தான் அந்த பெண்ணுக்கு தெரியாது. மற்றபடி எந்த நெம்பரில் இருந்து மெசேஜ் வந்தது என்பதை அறிந்துகொள்ள முடியுமல்லவா? அதனை வைத்தே மொத்த ஜாதகத்தையும் கறந்துவிட முடியும். இது தெரியாமல் இன்னும் விடலைப்பசங்க சிலர் முகம் தெரியாத பெண்களுக்கு புது சிம் வாங்கி ரூட் விட்டுட்டு, அது ரொம்ப எல்லைமீறிப்போய், இப்போ காவல் நிலையத்தில் கம்பி எண்ணிக்கிட்டு இருக்காங்க. அவங்க தான், சின்னப்பசங்க வயசு கோளாறுல தப்பு பண்றாங்க.

coimbatore college college-girl

ஒரு கல்லூரி பேராசிரியருக்கு எங்கப்பா போச்சு புத்தி? தன்னுடைய வகுப்பில் பாடம் படிக்கும் மாணவிக்கு இரவு 9 மணி ஆனதும் டான்னு மெசேஜ் அனுப்பிவிடுவாராம் கோவை தமிழ் கல்லூரி ஆசிரியர் ஒருவர். விஷயம் கொஞ்சம் பெருசாகி, ஊடகங்கள் கைக்கு அவர் சேட் செய்த ஸ்கிரீன் ஷாட்டுகள் சென்றுவிட்டது. மனுஷன் இன்னும் கல்லூரி மாணவன் போலவே நினைத்துக்கொண்டு, ரொம்பவே ஆடி இருக்காரு. தனியா இருக்க போர் அடிக்கலயா, வீட்ல அம்மா இருக்காங்க, இல்லாதப்போ சொல்றன் நீ வா, நம்ம ரெண்டு பேரும் தனியா இருக்கலாம் என்றெல்லாம் பேசி இருக்காரு.

coimbatore college college-girl

பாதிக்கப்பட்ட மாணவி முதலில் சீனியர் மாணவர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் பேராசிரியரை கொஞ்சம் அதட்டிக்கேட்டதற்கு உண்மையை ஒப்புக்கொண்டார். சில நேரங்களில் பனியனோடு படுத்துக்கொண்டு செல்பி எடுத்து அதனை மாணவிக்கு அனுப்புவாராம். அதே போல நீயும் அனுப்பு என வற்புறுத்துவாராம். இந்த சைபர் உலகில் எது செய்தாலும், நாம் பிடிபடுவோம் என்ற அடிப்படை அறிவு கூட இன்றி, வேலியே பயிரை மேய்ந்த கதையாக கோவையில் கல்லூரி பேராசிரியர் நடந்து கொண்ட விதம், இன்றைய கல்வி முறைமீதான குறையை உணர்த்துகிறது.