பொங்கல், தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கில் சிறப்பு பஸ் இயக்கப்படுவதாக சொல்றாங்க. அப்படியென்றால், அந்த ஆயிரக்கணக்கான பஸ் மற்ற நாட்களில் எங்கே இருந்திருக்கும்? புது பஸ் வாங்கவும் சாத்தியம் இல்லை. எல்லாமே கடைந்தெடுத்த ஏமாற்றுவேலை என்பதை உணர்ந்துகொண்டேன். கிராமங்களில் ஓடிக்கொண்டிருக்கும் பேருந்துகளை நிறுத்தி, சென்னைக்கு அனுப்பி வைத்துவிடுவார்களாம். அப்படியென்றால் கிராம மக்களின் நிலை?
இதனால் உள்ளூரில் போதிய பஸ்கள் இல்லாததால், ஏராளமானோர் படிக்கட்டுகளில் பயணிக்க வேண்டியுள்ளது. கல்லூரி செல்லும் மாணவர்கள் பலர் இருசக்கர வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக பயணிக்கின்றனர். விடுதியை விட்டு வெளியேறி தென் மாவட்ட பேருந்து நிலையங்களுக்குச் செல்லும் மாணவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தடுமாறிப்போவாங்க.
மாற்றுத்திறனாளிகள் படிக்கட்டு வரை நிரம்பி வழியும் கூட்டத்தில் ஏற முடியாது, இருக்கையில் அமரவும் முடியாது. சென்னையில் இருப்பவர்கள் மட்டுமே பண்டிகை காலங்களில் நெருக்கடி இல்லாமல் பயணிக்க வேண்டும் என்றும், மற்ற மாவட்ட மக்கள் எப்படியோ சென்று விடுவார்கள் என்றும் நினைப்பது தவறு. ஒரு நாள் கூத்துக்கு மீசையை மழித்த கதையாக, ஒரு நாள் சென்னையில் இருந்து வீடு திரும்பும் மக்களை மகிழ்விக்க தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் சிரமப்படுத்தப்படுகின்றனர் என்பதே உண்மை.