notification 20
Daily News
அடடே! ஒரு புழு எப்படி மாறுது பாருங்க: இப்படி செஞ்சா லஞ்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியுமாம்!

பட்டு வளர்ப்பு பிரேசில், சீனா, பிரான்சு, இந்தியா, இத்தாலி, கொரியா போன்ற நாடுகளில் குடிசைத் தொழிலாக உள்ளது. இன்று உலக பட்டுத் தயாரிப்பில் 60 சதவிகிதம் இந்தியாவிலும் சீனாவிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. புழுவில் இருந்து பட்டு எடுக்கிறாங்க என்று கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அது எப்படி எடுக்கப்படுகிறது என்பது பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வெள்ளையான புழு வளர்ப்பில் தொடங்கி, மஞ்சள் நிற பட்டு நூல் எடுப்பது வரை பெரிய பிராசஸ் இருக்கு. 

பட்டுப்பூச்சி ஆயிரக்கணக்கான முட்டைகளை இடுகிறது. பட்டுப்பூச்சியின் முட்டையிலிருந்து கம்பளிப்புழு இனமான குடம்பி என்ற பட்டுப்புழுக்கள் உருவாகின்றன. பட்டுப்புழுக்களுக்கு முசுக்கொட்டை இலைகள் உண்ண வழங்கப்படுகிறது. பலமுறை உருமாறும் புழுவானது பட்டு இழைகளைக் கொண்டே கூட்டை உருவாக்குகிறது. முன்னும் பின்னும் தனது எச்சில் கொண்டு பட்டு இழைகளை ஒட்டி வலையை உருக்குகிறது. காற்று பட்டு எச்சியானது காய்ந்து பட்டாக உருமாறுகிறது.

சராசரியாக ஒரு புழுவானது ஒரு மைல் நீளத்திற்கு இழைகளை இரண்டு மூன்று நாட்களில் தனது கூட்டில் உருவாக்குகிறது. மிகக் குறைந்த அளவே பயன்படுத்தத்தக்க பட்டானது ஒரு கூட்டிலிருந்து கிடைக்கிறது. 2500 பட்டுப்புழுக்கள் சேர்ந்தால்தான் ஒரு பவுண்ட் பட்டு உருவாக்க முடியும். ஒட்டியிருக்கும் கூடுகளைச் சுடுநீரில் இட்டு புழுக்கள் கொல்லப்படுகின்றன.

: வீடியோவை காணhttps://www.facebook.com/reel/914712663186505

சேதமாகாத வெளிப்புற கூட்டைத் தேய்ப்பதன் மூலம் இழையின் ஒருமுனை அறியப்படுகிறது. பின்னர் அந்த முனை கொண்டு பட்டு இழை சுற்றப்படுகிறது. ஒரு கூடானது சுமார் 1000 யார்ட் நீளப் பட்டு இழைகளைக் கொண்டுள்ளது. இந்த நேரத்தில் பக்குவப்படாத பட்டு எனப்படுகிறது. ஒரு நூலானது 48 தனித்தனியான பட்டு இழைகளால் உருவாக்கப்படுகிறது.

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts