notification 20
Misc
பாம்பைக் கண்டால் படையே ந*டுங்கும் என்னும்போது இந்த பாம்பு பிடிப்பவர்கள் மட்டும் எப்படி ப*யப்படாமல் பாம்பை பிடிக்கிறார்கள்?

பாம்பைக் கண்டால் படையே ந*டுங்கும் என்பது நிஜம். இருந்தும் இந்த பாம்பாட்டிகளும், பாம்பு பிடிப்பவர்களும் பாம்பை பார்த்து ப*யப்படாமல் அசால்ட்டாக எப்படி பாம்பை பிடிக்கிறார்கள் என்கிற கேள்வி நமக்குள் இருக்கும். practise makes a man perfect என்கிற ஆங்கில பழமொழியை கேட்டிருப்போம். அனுபவமே ஒருவருக்கு சிறந்த பாடத்தை கற்றுக்கொடுக்கும். இந்த பழமொழி அடிப்படையில் தான் அவர்கள் பாம்பை அசால்டாக பிடிக்கிறார்கள்.

பாம்பு பிடி நிபுணர்கள் யாரும் எடுத்த உடனே வி*ஷம் நிறைந்த பாம்புகளை பிடிக்க மாட்டார்கள். வி*ஷம் இல்லாத சாரைப் பாம்பை பிடித்து முதலில் பழகிக் கொள்வார்கள். அதேபோல காடுகளுக்கு சென்று பாம்பு பிடி நிபுணர்களுடன் வேலை செய்து அவர்கள் எப்படி பாம்பை பிடிக்கிறார்கள்? வி*ஷப் பாம்பிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை கற்றுக் கொள்கிறார்கள். அதற்கு பின்னர் தான் சாரைப் பாம்பை பிடித்து பழகி வி*ஷம் நிறைந்த பாம்புகளை பிடிக்க ஆரம்பிக்கிறார்கள்.

பாம்பு பிடி கருவிகள் பொதுவாக U வடிவில் வளைந்து இருக்கும். இந்த உபகரணத்தைக் கொண்டு எவ்வளவு தூரத்தில் நின்று பாம்பை பிடிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களையும் முறையாக கற்றுக்கொண்ட பின்னரே இந்த வேளையில் இறங்குவார்கள். இந்தியாவில் 300 வகையான பாம்புகள் இருந்தாலும் வெறும் சில சொற்ப பாம்புகளுக்கு மட்டுமே வி*ஷத் தன்மை அதிகம் உள்ளது. வி*ஷத் தன்மை அதிகம் உள்ள பாம்புகளிடம் மிகவும் க*வனமாக செயல்படுவதால் தான் அவர்களால் எளிதில் பாம்புகளை பிடிக்க முடிகிறது.

கம்ப்யூட்டர் வேலை தெரிஞ்சவங்களுக்கு விவசாயம் தெரியாது, விவசாயம் தெரிஞ்சவங்களுக்கு கம்ப்யூட்டர் வேலை பெரிய மலை போல் தெரியும். இதே போலத்தான் அந்த வேளையில் பயிற்சி பெற்று தலைசிறந்து விளங்குவதால் பாம்பு பிடிப்பவர்கள் நமக்கு வித்யாசமானவர்களாக தெரிகிறார்கள்.

Share This Story

Written by

Karthick View All Posts