பெரும்பாலும், ஒரு பெண்ணின் பாலியல் ஆசை அவளது துணையுடனான உறவால் பாதிக்கப்படுகிறது. ஒரு பெண் எந்த அளவுக்கு உறவை அனுபவிக்கிறாளோ, அந்த அளவுக்கு அவளது செக்ஸ் ஆசை அதிகமாகும். அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்கள் ஆசையை பாதிக்கலாம். சில சமயங்களில் உடலுறவில் ஆர்வமில்லாமல் இருக்கலாம். மூன்று பெண்களில் ஒருவருக்கு உச்சக்கட்டத்தை அடைவதில் சிக்கல் உள்ளது.
பாலியல் செயல்பாடுகளுடன் தொடர்புடைய வலி இருந்தால், வலி எங்குள்ளது என்பதைத் டாக்டரிடம் துல்லியமாக விவரிப்பது முக்கியம். ஆனால் ஒரு சில பெண்கள் உறவுக்கு தயாராகும் முன்பே உறவு கொள்ள கட்டாயப்படுத்துவதால் ஏற்படும் வலிக்கு எங்குமே தீர்வு இல்லை. முன் விளையாட்டின்றி உறவு கொள்ளும் போது பெண் உடலில் தேவையான சுரப்பு இருக்காது. அது பெண்ணுக்கு மிகுந்த வலியையும் வேதனையையும் தரும். இதுவும் ஒருவகை கற்பழிப்பு தான்.
விருப்பமின்றித் திருமணம் செய்து கொண்ட என் தோழியின் கணவர் இப்படி நடந்து கொண்டார். அதன் விளைவால் அவள் பெண் உடம்பில் ரத்தக் காயங்கள். அவள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. அவள் வீட்டில் அவள் சொல்வதை நம்பமறுத்தார்கள். மகப்பேறு மருத்துவர் ஒருவர் மூலம் உண்மை விளக்கப்பட்டு, அந்த பெண் காப்பாற்றப்பட்டார். ஆண் பெண் உறவு என்பது மிகவும் புனிதமானது என்பதை உணர வேண்டும். அதனை வற்புறுத்தி வாங்கக்கூடாது.