IT துறையில் நாம் மேலும் உயர நாம் நிறைய சவாலான பணிகளை செய்ய வேண்டும். அரசு வேலைகளை விட சவாலானது. படும் பாடு சொல்லமுடியாது. காலையில் வேலைக்கு சென்றால் இரவு 12 மணி கூட ஆகலாம். நடுவில் மேலதிகாரிகள் அழுத்தம். பிராஜெக்ட் முடிக்க வேண்டிய கட்டாயம். சில சமயங்களில் பெஞ்ச்சில் உட்கார வைத்து விடுவார்கள். வீட்டிலும் சொல்ல முடியாது. பெண்களுக்கு கூடுதல் சுமை. எனது மருமகள் படும் பாட்டை கண்டு வேலையை விடச் சொல்லிவிட்டேன்.
ஆனால் வெளியில் ஐ.டி வேலை என்று சொன்னால் வேறு மாதிரி நினைப்பாங்க. ஐடி வேலை என்றால், வேலையே இருக்காது என்பது போன்ற ஒரு மாயத்தோற்றம் உள்ளது. ஆண்களும் பெண்களும் ஜாலியாக பொழுதை கழிப்பர்கள் என நினைக்கிறாங்க. ஐடி துறையில் இருக்கும் அனைவரும் கைநிறைய சம்பாதிக்கின்றனர் என்றாலும், அவர்கள் மூளைக்குள் புகுந்து பார்த்தால் தான் படும் அவஸ்தை புரியும். நிறைய கம்பனிகள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளிலும் இறங்கிவிட்டது.
ஐடி துறையில் வேலை செய்பவர்களின் சம்பளம் மட்டும் தான் உங்கள் கண்ணுக்கு தெரிகிறது வாங்கும் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதம் வருமான வரியை எடுத்துவிட்டு தான் சம்பளமே தருகிறார்கள். குறுகிய வருடத்தில் அதிக சம்பளம் என்றால் அவ்வளவு எளிதல்ல செய்த வேலையை திரும்பத் திரும்ப செய்வது அல்ல. படித்துக் கொண்டே இருக்க வேண்டும் அப்படி என்றால் மட்டும்தான் வேலையில் இருக்க முடியும். ஒவ்வொரு ஐந்து மணி நேரத்திற்கும் ஒரு புதிய அப்டேட் வந்து கொண்டுதான் இருக்கிறது. இவை அனைத்திற்கும் மேல் உடலளவிலும் மனதளவிலும் தொய்வு ஏற்படும்.