பருப்பு குழம்போடு சாப்பிட்டு முடித்த பிறகு, தட்டில் லைட்டா பருப்பு ஒட்டியிருக்கும் போதே கொஞ்சம் சாப்பாடு போட்டு, வீட்டில் பிரை போட்ட எருமைப்பால் தயிர் ஊற்றி சாப்பிட்டால், ருசி நாக்கில் நின்று நடனம் ஆடும். இப்படி சாப்பிட்டு பழக்கியவனை சென்னை வந்ததும் ஒரு அப்பார்ட்மென்டில் அடைத்து, ஏதோ பேருக்குன்னு சாப்பாடு போட்டு, தயிர் வேண்டும் என்று கேட்டால், பாக்கெட் தயிர் கொடுப்பாங்க. அதையெல்லாம் வாயில் வைகக முடியாது.
கிராமத்தில் எருமைப்பால் தயிர் சாப்பிட்டு பழகியவர்களுக்கு பாக்கெட் தயிர் கொடுத்தால் கட்டாயம் சாப்பிட மாட்டாங்க. நகரத்தில் ருசியா இருக்க தயிரில் கொழுப்பு நிறையா இருக்கும் என்று சொல்லி பயமுறுத்தி வெச்சிருக்காங்க. உண்மையில், ஜீரண உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும் லாக்டோ பெசிலஸ் என்ற நன்மை பயக்கும் பாக்டீயாக்கள் வீட்டில் செய்யப்பட்ட தயிரில் தான் இருக்கும். அதனால் தான் வீட்டுத்தயிர் சீக்கிரமே புளித்து போய்விடும்.
கடைகளில் விற்கப்படும் தயிர் கெட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காக சோயாப் பால், சோளமாவு கலந்து விற்கின்றனர். அவை அவ்வளவு சீக்கிரம் புளிக்காது. நீங்க பிரிட்ஜ் விட்டு வெளியே எடுத்து வைத்திருந்தாலும் நீர்த்து போகாது. அதனால் தான் அதிக நாட்கள் வைத்து விற்பனை செய்கின்றனர். அப்படி இருந்தும் புளிப்பு சுவை வருவதில்லை. எனக்கெல்லாம் கடையில் விற்கும் பாக்கெட் தயிர் வாங்கி சாப்பிட்டால் தொண்டை வலி வந்துவிடும்.
அதற்கு காரணம் கடைகளில் விற்கப்படும் தயிரில் கேடு விளைவிக்கும் காக்கஸ் பாக்டீரியாக்கள் இருக்கும். அவை செரிமான உறுப்புகளுக்கு நல்லதல்ல. அதனை வைத்து தயிர் சாதம் கிளறினாலும் செரிமானக்கோளாறு உண்டாகும்.