ஹாலிவுட்டில் மிகப் பெரிய நட்சத்திரமாக இருப்பவர்கள் அவர்களுடைய நட்சத்திர அந்தஸ்தை பற்றி நிறைய அறிந்திருக்கின்றனர். அதனால்தான் அவர்கள் பெரும் ஊதியம் கேட்கும்போது தயாரிப்பு நிறுவனங்களும் தயங்காமல் அதற்கு ஒப்புக்கொள்கின்றன. ஹாலிவுட்டில் விலையுயர்ந்த ஒப்பந்தங்களை பெற்ற சில பிரபலங்களை பற்றி இப்போது பார்ப்போம்.
ஜானி டெப் என்ற பெயரை விட கேப்டன் ஜாக் ஸ்பாரோ என்ற பெயரை சொன்னால்தான் அனைவருக்கும் தெரியும். அந்த அளவுக்கு உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியனின் சூப்பர் டூப்பர் வெற்றியின் காரணமாக, ஜானி டெப் ஆலிஸ் இன் வொண்டர்லேண்டில் தனது கதாபாத்திரத்திற்காக சுமார் 68 மில்லியனை வருமானமாக ஈட்டினார்.
மிஷன் இம்பாசிபிள் கோஸ்ட் புரோட்டோகால் படத்துக்காக ஹாலிவுட்டின் ஆக்ஷன் ஹீரோக்களில் ஒருவரான டாம் க்ரூஸ் 75 மில்லியன் டாலர்களை சம்பளமாக வாங்கியுள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். மிஷன் இம்பாசிபிள் படத்தின் அனைத்து பாகங்களும் உலகம் முழுவதும் பட்டையை கிளப்பி மெகா வெற்றி பெற்ற படங்களாகும்.
ராபர்ட் டவுனி ஜூனியர் அனைவருக்கும் பிடித்தமான அயன் மேன் கதாபாத்திரத்தின் மூலம் மறக்கமுடியாத செயல்களையும் சாகசங்களையும் செய்து தன்னுடைய படங்களில் ரசிகர்களை மகிழ்வித்தார். போர்ப்ஸின் கூற்றுப்படி மார்வெல் நிறுவனத்தின் அவென்ஜ்ர்ஸ் படத்தின் தொடக்கத்தில் இவர் 20 மில்லியனை மார்வெல் நிறுவன படங்களுக்காக பெற்றார் என்றும் அவென்ஜர்ஸ் எண்ட்கேமின் வெற்றிக்குப் பிறகு அவருக்கு மற்றொரு 55 மில்லியன் டாலர் வருமானம் கிடைத்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 75 மில்லியன் டாலர்களை அவர் இதன் மூலம் ஈட்டியுள்ளார்.
மேட்ரிக்ஸ் படத்தின் மூன்று பாகங்களிலும் நடித்த அதிரடி நட்சத்திரமான கினு ரீவ்ஸ் அதற்காக சுமார் 250 மில்லியன் டாலர்களை பெற்றுள்ளார் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஹாலிவுட்டின் ஆல் டைம் பேவரட் பட வரிசையில் மேட்ரிக்ஸ் படத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு.
MIB படத்தின் மூன்று பாகங்களின் உலகளாவிய வெற்றியின் மூலம் ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான வில் ஸ்மித் இலாபப் பங்கு உட்பட படத்தின் மூன்றாம் பகுதிக்காக 100 மில்லியன் டாலர்களை வருமானமாக எடுத்துக் கொண்டார். இந்த நடிகர்கள் அனைவரும் ஒரு சில படங்களின் மூலமே இவ்வளவு வருமானம் ஈட்டியுள்ளனர் என்றால் அவர்களின் வாழ்க்கையில் நடித்த அனைத்து படங்களுக்காகவும் எவ்வளவு பணத்தை சம்பாதித்திருப்பர் என்று யோசித்தால் தலையே சுற்றுகிறது.