notification 20
Daily News
ஐயோ! இத்தனை வருஷம் சம்பாரிச்ச பெயரெல்லாம் போச்சே! விஜயை புலம்பவிட்ட மெசேஜ்? உச்சந்தலையில் ஏறிய சூடு!

பிரபல இயக்குனரின் வரவால் நடிகர் விஜய் பக்கம் அடித்த காற்று, கொஞ்சம் தள்ளி வீச ஆரம்பித்துள்ளது. விஜய் என்றால் பிரம்மாண்டம், பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கு என்பதெல்லாம் உண்மை தான். இருந்தாலும், இப்போது நம் மக்கள் திறமைக்கு மதிப்பு கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். நடிகர் கமல்ஹாசனை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படம், அவ்வளளோ ஹிட் அடிக்கும் என கமலே எதிர்பார்த்து இருக்கமாட்டார். 

திடீரென சூப்பர் டூப்பர் வெற்றி கண்டதால், திக்குமுக்காடிப்போன கமல், படக்குழுவினர் அனைவருக்கும் விலை உயர்ந்த பரிசு கொடுத்து அசத்தினார். அப்போ தான் திறமைக்கு எவ்வளோ மதிப்பு இருக்கு என்பதை எல்லோரும் உணர்ந்துகொண்டனர். இப்போது தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். அதன் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் 16 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிவிட்டது. நெட் ப்ளிக்ஸ் நிறுவனம் ஓடிடி உரிமையை வாங்கி இருக்கிறது. சன் நிறுவனம் சாட்டிலைட் உரிமையை பல கோடி கொடுத்து தட்டி தூக்கி இருக்கிறது. 

சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை இரண்டும் சேர்த்து கிட்டத்தட்ட 160 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகி இருக்கிறதாம். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இவ்வளோ வசூல். இதற்கு காரணம் விஜய் தான் என ரசிகர்கள் மார்தட்டிக்கொள்கின்றனர். உண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் மட்டுமே, இவ்வளோ வியாபாரம் நடந்துள்ளது என பிரபல புரொடியூசர் இயக்குநர்கள் குரூபில் மெசேஜ் தட்டிவிட்டுள்ளார். இவ்வளவு வருடம் தான் சேர்த்து வைத்த பிரபலம், இயக்குனரால் பரிபோனதாக விஜய் வருத்தப்பட்டார். 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts