முடி உதிர பல காரணங்கள் இருக்கும். ஒருவரின் உ டல்நிலையை பொறுத்து தான் இதனை முடிவு செய்ய முடியும். பி ரச்சனையின் காரணத்தை கண்டுபிடித்துவிட்டால் போதும், அதற்கான தீர்வை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. பலருக்கு இங்கு பி ரச்சனையின் காரணமே தெரியாத போது, எங்குபோய் அதற்கு தீர்வு கண்டுபிடிப்பார்கள்?
குறிப்பாக முடி உதிர்வு பி ரச்சனை எனும்போது, முதலில் உங்களுக்கு எதனால் முடி உதிர்வு ஏற்படுகிறது என்பதை ஆராயுங்கள். புரதசத்து குறைவால் முடி கொட்டுகிறதா? இல்லை பொடுகால் முடி உதிர்கிறதா? இல்லை மன அ ழுத்தத்தால் கொட்டுகிறதா? இல்லை உ டல் சூட்டால் முடி கொட்டுகிறதா? என்பதை சரியாக பார்த்து கண்டுபிடியுங்கள்.
யூ டியூப்பில் வரும் எல்லா வீடியோக்களையும் முயற்சி செய்து கொண்டிருக்காதீர்கள். யூ டியூப்பில் அவர்கள் கூறும் தீர்வில், தயிர் சேர்த்து முடி வளர தீர்வு சொல்கிறார்கள் என்றால், அது உ டல் சூடு உள்ளவர்களுக்கு பொருந்தும். குளிர்ச்சியான உ டலுக்கு அந்த தீர்வு எப்படி பொருந்தும்? சொல்லுங்க? சளி பிடிக்க செய்யாதா? எந்த காணொளி டிப்ஸை பின்பற்றும் முன்னரும் அது நமக்கு ஒத்துவருமா? என்று மட்டும் யோசிங்க.
இப்போது இங்கே நாங்க பகிர்ந்து கொள்ள போகும் டிப்ஸ் முழுக்க முழுக்க உ டல் சூட்டால் முடி உதிர்பவர்களுக்கு மட்டுமே. சிலருக்கு முடி கட்டை போல அடர்த்தியாக இருக்கும். உ டல் சூட்டால் முடி உதிர்வு ஏற்பட்டு, முடியின் அடர்த்தி நாய் வால் போல மாறியிருக்கும். அப்படி உள்ளவர்களுக்கு தான் இந்த டிப்ஸ். நார்த்தங்காய் கேள்விப்பட்டிருப்பீர்கள். நார்த்தங்காய் ஊறுகாய் உண்டிருப்பீர்கள். நார்த்தங்காய் பழுத்து இருந்தால் அது சாப்பிட உகந்தது. இவற்றில் அமினோ அ மிலம், இனிசைன், குளுடாமிக் அ மிலம், பெர்கமோட்டின் என பலவகை ஊட்டச்சத்து அ மில வகைகள் உள்ளன. இவை யாவும் முடி வளர தூண்டக்கூடியவை.
தினமும் ஒரு நார்த்தங்காயை உணவில் ஏதாவது ஒருவகையில் சேர்த்து வரும்போது, முடி உதிர்வு முதலில் கட்டுக்குள் வரும். பின்னர் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்க. க ர்ப்பிணி பெண்கள் நார்த்தங்காய் சாற்றை காலையும் மாலையும் நீரில் கரைத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து உண்டுவர சுகப்பி ரசவம் நடக்கும்.