notification 20
Timeless
#hair loss treatment: உப்பு தண்ணீரில் குளித்து முடி கொட்டுகிறதா? குளிக்கும் முன் இதை இரண்டு சொட்டு குளிக்கும் நீரில் விட்டுப்பாருங்க!

பெரும்பாலானோர் வீடுகளில் போரில் வரும் உப்பு நீரையே குளிக்க பயன்படுத்துகிறார்கள். இந்த நீரில் கால்சியம், மக்னீசியம் பெருமளவில் இருக்கும்.இந்த தண்ணீரை தொடர்ந்து குளிக்க பயன்படுத்தும் போது,முடியின் வலிமை குறைந்து நாளடைவில் முடி உதிர்ந்து,அந்த இடத்தில் மீண்டும் முடி வளர்வதற்கான வாய்ப்பு இல்லாமல் கூட போகலாம்.இதை தடுக்க உதவும் ஒரு சில எளிய முறைகளை பார்ப்போம்..

உப்புநீரில் தலைக்கு குளிக்கும்போது ஆப்பிள் வினிகரை நீரில் கலந்து குளித்தால் முடி உதிர்வு பிரச்சனை வராது.ஆப்பிள் வினிகர் எளிதாக கிடைக்க கூடிய பொருள்.அடுத்து எழுமிச்சை சாற்றை நீரில் விட்டு குளித்தலும் இந்த பிரச்சனைக்கு தீர்வாக அமையும், பொடுகு தொல்லையும் இருக்காது.. ஷவர் வடிகட்டியை பயன்படுத்தாலாம் ஆனால் அதில் தாது உப்புக்கள் முற்றிலும் நீங்கி விடும் என சொல்லமுடியாது,ஓரளவு கால்சியம், மக்னீசியம் நீங்கும்

உப்புநீரில் குளிப்பதால் நன்மைகளும் ஏராளம்.உப்புநீரில் அதிகப்படியான கால்சியம் ,மெக்னீசியம் இருப்பதால் இது உங்களது சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.உப்புநீரில் தொடர்ச்சியாக குளிக்கும் போது விரைவில் வயதாவது தடுக்கப்பட்டு எப்போதும் இளமையான தோற்றமளிக்கும்.தசை நாண் அலற்சி,வாதம் போன்றவற்றை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.அரிப்பு மற்றும் தூக்கமின்மை தொல்லைகளை களைவதிலும் உப்புநீர் குளியல் முக்கிய பங்கு வகிக்கிறது

இறந்த செல்களை நீக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது,உப்புநீரில் அல்கலைன் பண்பு இருப்பதால் அசிடிட்டி பிரச்சனைக்கும் தீர்வாக அமையும்.மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை காட்டிலும் உப்புநீர் குளியலை எடுத்துக்கொள்ளலாம்.. உடலில் அதிக அழுத்தம் நிறைந்த இடம் பாதம், போர் தண்ணீரில் குளிப்பது பாதங்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. உப்புநீரில் குளிப்பதில் தீமைகளை காட்டிலும் நன்மைகளே அதிகம் நிரம்பியுள்ளது, தலைக்கு குளிக்கும் போது மட்டுமே முடி உதிர்வை ஏற்படுத்துகிறது,அதற்கு மேற்கண்டவை தீர்வாக அமையும்,

Share This Story

Written by

AP View All Posts