notification 20
Daily News
"உன்ன வெச்சு படம் எடுக்குறான் பாரு, அவன போடணும்" நடிகர் ஜி.வி.பிரகாஷ் இப்படி எல்லாம் பேசி இருக்காறா? லவ் டுடே பட பாணியில் பழைய மெசேஜ்களை கிளறி நடந்த சம்பவம்!

யுவன் ஷங்கர் ராஜா, மகேந்திர சிங் தோனி, சச்சின் டெண்டுல்கர் போன்ற பிரபலங்களை விமர்சித்த லவ் டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் பழைய ஃபேஸ்புக் பதிவுகள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. அவர் பிரபலம் ஆவதற்கு முன்னர் பேஸ்புக்கில் பதிவிட்ட கருத்துகள் இப்போது விமர்சனத்தை எதிர்கொண்டன.

அவை போட்டோஷாப் செய்யப்பட்டவை என்றும், அவற்றில் சில உண்மையானவை ஒப்புக்கொண்டார். அறியாமையில் சில தவறுகளைச் செய்ததாகவும், வயதுக்கு ஏற்ப முதிர்ச்சி அடைந்துவிட்டதாகவும் கூறினார். இப்போது இசை அமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷின் பழைய ட்வீட்கள் இணையத்தில் பரவி ரசிகர்கள் அவரை ஆன்லைனில் ட்ரோல் செய்து வருகின்றனர். 

ஜி.வி.பிரகாஷ் மற்ற நடிகர்களின் ரசிகர்களை சாடுவதைக் காட்டும் ஸ்கிரீன் ஷாட்கள் இணைய தளங்களில் ட்ரெண்டாகத் தொடங்கின. "எல்லாரும் அப்யூஸ் பண்ணிட்டு தான ஸ்டார் ஆனாங்க ஸ்டார் ஆகிட்டு அப்யூஸ் பண்ண ஒரே ஆளு ஜிவி தான்" என அவர் முன்னர் பேசியதை பதிவிட்டு வருகின்றனர். 

Share This Story

Written by

public View All Posts