Timeless

இது பகல் கொள்ளையா இல்ல பச்சைப் பொய்யா? 500 ரூவா பொருளை 2.5 லட்சத்துக்கு விற்பனை செய்வது ரொம்ப அநியாயம் பாஸ்!

Jun 15 2021 05:07:00 PM

இத்தாலியை சேர்ந்த Gucci என்ற நிறுவனம் இத்தாலியின் ப்ளோரன்ஸ் நகரில் அமைந்துள்ளது. ஆடம்பர பொருட்களை விற்பனை செய்து வரும் இந்த நிறுவனத்தில் காலணிகள், வாசனை திரவியங்கள், ஹேண்ட் பேக்குகள், ஆடைகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் என்று பலவிதமான பொருட்களும் விற்பனைக்கு உள்ளது. இவர்களுடைய ஆடம்பர பொருட்கள் சற்று விலை அதிகமாகத்தான் இருக்கும்.

gucci-italy indian-style-kurtha

சாதாரண பொருட்களின் விலை கூட லட்சக்கணக்கில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். இந்த நிறுவனத்தின் இணையதளத்தை முதன் முதலாக பார்ப்பவர்களுக்கு தலையே சுற்றி விடும். அவ்வளவு அதிக விலை இவர்களுடைய பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களின் இணையதளத்தில் விற்பனைக்கு இருக்கும் பொருட்களின் லிஸ்ட்டை பார்த்த எனக்கும் ஒரு நிமிடம் தலை சுற்றியது. இவர்களின் வியாபாரம் பற்றிய தகவல்களை நான் அறிந்த வரையில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

gucci-italy indian-style-kurtha

இந்தியன் ஸ்டைல் மாடலில் இருக்கும் குர்தா ஒன்றின் விலை இவர்களுடைய இணையதளத்தில் 3500 டாலர் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு 3500 ரூபாய் போலத்தெரியும். ஆனால் அது 3500 டாலர் என்பதால் இந்திய மதிப்பில் அதனுடைய விலை ஏறத்தாழ 2.5 லட்ச ரூபாயாகும். ஆர்கானிக் லைனியென் கப்டான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குர்தாவில் ப்ளோரல் எம்பிராய்டரி செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

gucci-italy indian-style-kurtha

அது என்ன டிசைனோ நமக்கு தெரியவில்லை. ஆனால் நம்ம ஊரில் வெறும் 500 ரூபாய்க்கு இந்த குர்தாவை வாங்க முடியும். கொஞ்சம் காஸ்ட்டிலி குர்தா வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் 1000 அல்லது 2000 ரூபாய் இருந்தால் இந்தியாவில் இந்த குர்தாவை வாங்கிவிட முடியும். ஆனால் இந்த குர்தாவிற்கு 2.5 லட்சம் விலை நிர்ணயம் செய்திருப்பது எப்படிப்பட்ட விற்பனை யுக்தி என்று புரியவில்லை. இதை நீங்கள் முழுத்தொகை கொடுத்தும் வாங்கலாம் அல்லது தவணை முறையிலும் வாங்கலாம். ஆனால் என்ன விலை தான் கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவராக இருக்கிறது.