notification 20
Daily News
இன்னும் 3 நாளில் முடியப்போகுது! வித்தியாசமான ஜிம் அனுபவம் வேண்டுமென்றால் உடனடியாக கோவாவுக்கு கிளம்புங்க! ஸ்பெஷல் அயிட்டம் வெச்சிருக்காங்களாம்!

எல்லாவற்றிலும் வித்தியாசம் தேடும் கூட்டத்தை சேர்ந்தவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்காகவே ரெடியாகியுள்ள ஜிம்முக்கு கட்டாயம் சென்று வாருங்கள். கோவாவில் திறக்கப்பட்டுள்ள ஜிம்மில் நீங்கள் எதிர்பாராத வித்தியாசமான அனுபவம் கட்டாயம் உங்களுக்கு கிடைக்கும். திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஜிம்மில் பிரம்மாண்ட கலை படைப்புகளும் இடம்பெற்றுள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Diptej Vernekar (@diptejvernekar)

அற்புதத்தின் மறுவடிவம் என்று சொல்லும் அளவுக்கு சூப்பரான சம்பவத்தை செய்துள்ளார் இதை வடிவமைத்த அந்த கலைஞன். உடற்பயிற்சி செய்யும் போது உங்களுக்கு அருகே ஒரு ராட்சத உருவமும் அசைந்து கொண்டு இருக்கும். முதல் முறை இதை பார்க்கும் அனைவரும் கண்டிப்பாக பயந்து போவார்கள். இருப்பினும் அதன் பிறகு மீண்டும் மீண்டும் இதை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கும். ஒரு முறை இங்கு வந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஆசையும் ஏற்படும். இந்த திறந்த வெளி ஜிம் இன்னும் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என்று கூறியுள்ளார்கள். எனவே உங்களுக்கு விருப்பம் இருந்தால் உடனே அங்கு கிளம்பி விடுங்கள்.

Share This Story

Written by

Gowtham View All Posts