notification 20
Highrise
உலகிலேயே மக்கள் அதிக சந்தோசமாக வாழும் நாடு எது தெரியுமா? நம்ம பேசாம இந்த நாட்டுக்கு போயிடுவோமா?

கடந்த வருடம் உலகம் முழுவதும் கொ ரோனா பரவல் அதிகமாக இருந்ததால் உலகமே சந்தோசமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இருந்தும் சில நாடுகள் எப்போதும் போல சந்தோஷமுடன் வாழ்ந்துவந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு நாட்டில் உள்ள மக்கள் சந்தோசமாக இருந்தால் மட்டுமே அந்த நாடு செழிப்படையும். மற்றபடி இது சுதந்திர நாடு என்று சொல்லிக்கொள்வதில் எந்த பெருமையும் இல்லை.

பின்லாந்து, ஐஸ்லாந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்வீடன், நார்வே, நியூஸிலாந்து, ஆஸ்திரியா போன்ற நாடுகளில் வாழ்ந்த மக்கள் சந்தோசமாக இருந்ததாக ஆய்வு அறிக்கையில் வெளியாகியுள்ளது.

குறிப்பாக ஆண்டுதோறும் வெளியாகும் அனைத்து அறிவிப்பிலும் நியூஸிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளின் பெயர்கள் மறக்காமல் இடம்பெறும். நமக்கும் ஒரு விசா கிடைச்சா பேசாம ஜெர்மனி பக்கம் போய்டலாமோன்னு தோணுது. எத்தனை நாள் தான் நம்மளும் இந்தியாவுலயே இருக்குறது.

Share This Story

Written by

Karthick View All Posts