Daily News

ஆண்களுக்கு பாதுகாப்பே இல்லையா? வேலை முடித்து ரோட்டில் நடந்து வந்த இளைஞரை தூக்கிச் சென்று நாசம் செய்த 4 பெண்கள்! காருக்குள் மாறி மாறி!

Nov 24 2022 10:50:00 PM

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த நபர் ஒருவர் தோல் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இரவு வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது கார் ஒன்று அவரது அருகில் வந்து நின்றது. உள்ளே நான்கு பெண்கள் இருந்தனர். ஒரு துண்டு சீட்டை வெளியே நீட்டி முகவரி கேட்டுள்ளனர். பேசிக்கொண்டிருக்கும் போதே இளைஞரின் முகத்தில் ஸ்பிரே அடித்து காருக்குள் தூக்கிப்போட்டனர்.

Four girls kidnapped blindfolded labourer

மயக்க நிலையில் இருந்த அவரிடம் நான்கு பெண்களும் மாறி மாறி உறவு கொண்டனர். சுயநினைவு வரும் போது காரில் அமர்ந்து, கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் இருந்தார். அதன்பிறகு பெண்கள்  அவரை அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவருக்கு போதைப்பொருள் கொடுத்ததாக கூறப்படுகிறது. மது அருந்த சொல்லி தன்னையும் கட்டாயப்படுத்தி குடிக்க வைத்ததாகவும் குற்றம் சாட்டினார்.

Four girls kidnapped blindfolded labourer

தொடர்ந்து மீண்டும் நான்கு பேரும் மாறி மாறி பலாத்காரம் செய்ததாக அந்த நபர் கூறினார். பின்னர் அதிகாலை 3 மணியளவில் சாலை ஓரமாக தள்ளிவிட்டு சென்றனர். இந்த விவகாரத்தில் பஞ்சாப் காவல்துறையின் புலனாய்வுத் துறை இந்த விவகாரத்தில் தானாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.  இளைஞர்  உயிருடன் திரும்பியதால் புகார் அளிக்க வேண்டாம் என்று அவரது மனைவி கேட்டுக் கொண்டார்.