நம்ம சாதாரணமா நினைக்கிற சில வேலை ரொம்ப க*ஷ்டமா இருக்கும். இதெல்லாம் ஒரு வேலையா, இந்த வேலைக்கு போனா நம்ம ஜாலியா இருக்கலாம் என்றெல்லாம் நினைக்கலாம். உண்மையில் அந்த வேலையில் பணியாற்றும் நபர்களுக்கு மட்டுமே அதன் உண்மை வலி என்னவென்று தெரியும். உதாரணத்திற்கு உணவு டெலிவெரி பண்ணும் டெலிவரி பாய் வேலை பற்றி நாம் சாதாரணமாக நினைப்போம்.
ஒரு அஞ்சு நிமிஷம் அவங்க லேட்டா வந்தாலே நமக்கு ரொம்ப கோவம் வந்துரும். இதைக்கூட நேரத்துக்கு கொண்டு வந்து கொடுக்க மாட்டிங்களா? நீங்கெல்லாம் என்ன வேலை பாக்குறீங்க என்று நாம் வாய்க்கு வந்தபடி திட்டுவோம். அவரும் வேறு வழி இல்லாமல் நாம் சொல்வதை கேட்டுவிட்டு சென்றுவிடுவார். அந்த டெலிவரிக்கு கம்மியான மதிப்பெண்கள் கொடுத்து ஏதோ உலகக் கோப்பையையே வாங்குன மாதிரி சந்தோசப்படுவோம்.
நமக்கு சாப்பாடு 5 நிமிசம் லேட்டா வந்ததுக்கே இப்படி பண்ணுறோமே, என்னைக்காவது அவங்க எப்போ சாப்பிடுவாங்க என்று நினைத்து பார்த்திருப்போமா? காலையில் பொதுவாக 5,6 மணிக்கு முன்போ அல்லது 11 மணிக்கு பின்னரோ தான் சாப்பிடுவார்கள். மதிய உணவு 11 மணிக்கோ அல்லது 3 மணிக்கு மேல் தான் சாப்பிடுவார்கள். இரவு உணவு பொதுவாக 11 மணிக்கு மேல் தான் சாப்பிடுவார்கள்.
அவங்க நேரத்துக்கு சாப்பிடாம கிடைக்கும் நேரத்தில் சாப்பிட்டுக்கொண்டு நமது பசியை போக்குகிறார்கள். அவங்களை பாராட்டவில்லை என்றால் கூட பரவாயில்லை. அவங்களை திட்டாமல் அவங்க மனசு க*ஷ்டப்படுவது போல பேசாமல் இருக்கலாம். காசு கொடுக்கிறோம் என்பதற்காக என்னவேண்டுமானாலும் பேசினால் அதே போல நம்முடைய முதலாளியும் நம்மை ஒருநாள் அதே மாதிரி பேச வாய்ப்புள்ளது. முடிந்தவரை அவர்களை ஏசாமல் அன்பாக பேசினால் அவங்களுக்கும் ஒரு மனநிம்மதி இருக்கும். வெறும் அரை மணி நேரத்தில் 50 பேருக்கு உணவு டெலிவரி செய்யும்போது சில நேரங்களில் லேட் ஆகத்தான் செய்யும். முடிந்தவரை அவர்களின் இடத்தில் இருந்து யோசித்தால் நமக்கு எந்த கோவமும் வராது.