notification 20
Lushgreen
கொங்கு மண்டலத்தில் பிறந்தவரா நீங்கள்? கோடிகளில் புரள வைக்கும் தொழில் வாய்ப்பு! உங்க ஊரைச் சுற்றியே கொட்டிக்கிடக்கும் புதையல்!

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து அதிக தொழில் வளம் கொண்ட நகரம் கோவை. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் வட்டாரத்தில் தொழில் செய்து பிழைக்கத்தெரியாதவர்கள் வேறு எங்கு சென்றாலும் பிழைக்க முடியாது என்பார்கள். அந்த அளவுக்கு தொழில் வாய்ப்புகள் குவிந்து கிடக்கும் பகுதி அது. கேரள மாநிலத்துக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் கொங்கு மண்டலத்தை கடந்தே செல்வதால், போக்குவரத்துக்கும் பஞ்சமில்லை. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை காட்டிலும், அந்தப்பகுதியில் சுயதொழில் ஆர்வம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டால், புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் எளிதில் வெற்றி காண முடியும்.

கோவையில் தயாராகும் இன்ஜினியரிங் பொருட்கள், ஆட்டோ உதிரி பாகங்கள், கிரைண்டர்கள் மிக்ஸி மற்றும் செயற்கை ஆபரணங்களுக்கு வெளிநாடுகளில் நிறைய டிமாண்ட் இருக்கு. கைத்தறி நெசவு ஆடைகளும் ஏற்றுமதி செய்ய முடியும். திருப்பூரிலிருந்து நீங்கள் டி-ஷர்ட் போன்ற பின்னலாடைகளை வாங்கி அமெரிக்க ஐரோப்பிய போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். உலககோப்பை கால்பந்து போட்டிகளுக்குக் கூட அங்கிருந்து தான் டி-ஷர்ட் அனுப்பப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

இது தவிர ஊட்டியில் விளையும் காய்கறி முழுக்க, கீழே மேட்டுப்பாளையத்துக்கு கொண்டு வரப்பட்டு மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. இங்கே விளையும் உருளைக்கிழங்கிற்கு இலங்கையில் தனி மவுசு உண்டு. புரோகோலி போன்ற ஊட்டியில் இருந்து கிடைக்கும் தாய்லாந்து காய்கறிகளை இந்தியாவிற்குள்ளேயே ஏற்றுமதி செய்ய முடியும். இவற்றில் பெரிதாக தொழில் போட்டி கிடையாது. அப்படியே ஈரோடு பக்கம் வந்தால், மஞ்சள் ஏலத்தில் எடுத்து, அதனை விலை அதிகம் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். அதில் கணிசமான லாபம் உண்டு.

பொள்ளாச்சியிலிருந்து தேங்காய் மற்றும் தென்னையிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பல்வேறு பொருட்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. எனக்கு தெரிந்த வரையில் பம்ப், கியர் போன்ற இன்ஜினியரிங் பொருட்கள் உற்பத்தியில் சில கோவை நிறுவனங்கள் கொடுக்கும் தரத்தை பெரிய பெரிய பன்னாட்டு நிறுவனங்களால் கூட கொடுக்க முடிவதில்லை. அதற்கென்றே தனி தேவை இருக்கிறது. சரியான முறையில் தொழில் நுணுக்கம் அறிந்துகொண்டு இறங்கினால், கோடிகளில் புரளும் தொழில் வாய்ப்பை எளிதில் உருவாக்கிவிட முடியும். அந்த நுணக்கத்தை அறிந்துகொள்ள சிரமப்பட்டு சிலர் தொழில் தொடங்கும் எண்ணத்தையே கைவிட்டு விடுகின்றனர். 

Share This Story

Written by

Senthil View All Posts