notification 20
Daily News
பணத்திற்கு காலாவதி தேதி போட்டால் என்ன ஆகும்? "கேடி" கோடீஸ்வரர்கள் நிலைமை இவ்வளளோ மோசமாகுமா? சம்பவம் காத்திருக்கு!

மளிகை கடையில் விற்கும் பொருட்களுக்கு காலாவதி தேதி குறிப்பிடுவது போல, பணத்திற்கும் காலாவதி தேதி  இருந்தால் என்ன ஆகும்? பிச்சைக்காரன் படத்தில் கூட இது பற்றி காமெடியா பேசி இருப்பாங்க. பெருசா கவனிச்சு இருக்க மாட்டோம். உண்மையில் சில நாடுகளில் இந்த நடைமுறை உள்ளது. ஒருமுறை பண மதிப்பிழப்பு நடந்ததற்கே, நம் மக்களால் தாக்குபிடிக்க முடியவில்லை. இப்படி ஒரு நடைமுறை வந்தால், ஆட்டம் கண்டுரும். 

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பணத்துக்கு காலாவதி தேதி உண்டு. அதனை பணத்தில் அச்சடித்து இருக்க மாட்டாங்க. பழைய நோட்டுக்கள் காலாவதி ஆவதை, நோட்டுக்களின் வரிசை எண் படி அறிவிப்பார்கள். அதனை அந்நாட்டின் மத்திய வங்கியில் கட்டித்தான் மாற்றவேண்டும். இந்த அண்டர் கிரவுண்டில் பணத்தை பதுக்கும் கோஷ்டிகளுக்கு இந்த திட்டம் தலைவலியை கொடுக்கும். 

எனவே தான், அங்கெல்லாம் பொருள்கள் விறபனைக்கு செயலிப் பரிமாற்றம், ஏடிஎம் கார்டு பரிமாற்றம் ஊக்குவிக்கப்படுகிறது. அதே போல அசையாச் சொத்துக்களான நிலம், வீடு வாங்குவது, விற்பது பண நோட்டுக்கள் மூலம் இயலாது. வங்கி வரைவோலை மூலம்தான் முடியும். இந்தியாவில் இப்படி செய்யுங்கன்னு சொன்னால், அரசாங்கத்தை வசை மொழியில் திட்டுகின்றனர். அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டுக்கு, அடிக்கடி பொருளாதார சீர்திருத்தங்கள் அவசியம் வேண்டும். இல்லையென்றால் இலங்கை நிலை தான் நமக்கும். 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts