கோவிலுக்கு சென்றால் சங்கிலியில் கட்டப்பட்ட யானையை நாம் எல்லோரும் பார்க்கலாம். யானை அவ்வளவு பெருசா இருக்கு. போயும் போயும் ஒரு சின்ன சங்கிலிக்கு ப*யந்து பவ்யமாக நின்றுகொண்டிருக்கும். அதனுடைய பலத்திற்கு யானை நினைத்தால் அந்த சங்கிலியை உ*டைத்து விடலாம். ஆனால் ஒருபோதும் யானை அந்த முயற்சியில் இறங்காது. இதுக்கு காரணம் என்ன தெரியுமா?
ஒரு யானை குட்டியாக இருக்கும்போதே அதன் கூட்டத்தில் இருந்து அதனை பிரித்து மனிதர்களிடம் கொண்டு வருகிறார்கள். இதனால் அதன் கூட்டத்தின் மூலம் கற்றுக்கொள்ளும் அனைத்து வித்தைகளையும் அதனால் கற்றுக்கொள்ள முடியாது. ஆரம்பம் முதலே மனிதன் தரும் உணவிற்கும், பழத்திற்கும் அ*டிமையாகி விடுகிறது.
நம்முடைய பலம் இதுதான் என்று தெரியாமலே வளர ஆரம்பிக்கிறது. மனிதன் கொடுக்கும் ஆணைக்கு கட்டுப்பட்டு நடக்க பழகிவிடுகிறது. ஒரு பசு மாட்டைப் போல கட்டிய இடத்தில் மட்டும் தான் நிற்கும். சில நேரங்களில் யானைப் பாகன் இல்லாத நேரங்களில் கூட அந்த இடத்தை விட்டு நகராது. காரணம் யானைப் பாகன் அதன் அருகில் அங்குசத்தை வைத்துவிட்டு சென்றிருப்பார். ஒரு வேலை அந்த யானை எதாவது சே*ட்டை செய்தால் அந்த அங்குசத்தை வைத்து யானை பாகன் என்ன த*ண்டனை தருவார் என்பதை அந்த யானை நன்றாக தெரிந்து வைத்திருக்கும்.
உலகில் நிறைய பேர் இப்படித்தான் தங்கள் பலம் தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள். அந்த யானை நினைத்தால் அது இருக்கும் பகுதியை து*வம்சம் செய்யும் அளவுக்கு சக்தி கொண்டது. ஆரம்பத்தில் இருந்து யானை அப்படி பழகியதால் தன் முழு பலம் தெரியாமல் பசு மாடு போல காட்சிப்பொருளாக நிற்கிறது. மனிதர்களும் தங்கள் பலம், பலவீ*னம் என்ன என்று தெரியாமல் இருந்து வந்தால் கடைசி வரை ஒருவருக்கு அ*டிமையாகத் தான் இருக்க முடியும்.