notification 20
Daily News
70 வயதில் வந்த காதல்! 65 வயதில் கிடைத்த காதலி: பானை விற்கப்போன இடத்தில் அப்படி என்ன தான் நடந்திருக்கும்?

ஒடிசாவில் உள்ள தொலைதூர கிராமத்தில் வசிக்கும் 70 வயதான சக்திபதா மிஸ்ரா, தனது குழந்தைகளால் கைவிடப்பட்டு, வயதான காலத்தில் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியாமல் தவித்து வந்தார். அதே போல இன்னொரு கிராமத்தில் 65 வயதான தேஜஸ்வினி மண்டல், சில ஆண்டுகளுக்கு முன்பு கணவனை இழந்து, மூன்று மகன்களால் கைவிடப்பட்டார். 

தேஜஸ்வினி வாழ்வாதாரத்திற்காக மண் பானைகளை விற்று வந்தார், அந்த நேரத்தில் அவர் சக்திபாதாவை சந்தித்தார். அவர்கள் ஒருவரையொருவர் தெரிந்துகொண்டு சகஜமாக பழக ஆரம்பித்தார்கள். வாழ்க்கையில் ஒரே மாதிரியான மனவேதனைகளைக் கடந்து, இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலான அன்பைக் கண்டனர். சமீபத்தில், சக்திபாதா தேஜஸ்வினியை திருமணம் செய்து கொள்ள முன்வந்தார். 

இருவரும் கிராமத்தின் ஜெகநாதர் கோவிலில் பாரம்பரியமாக திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007ன் பிரிவு 7 மற்றும் 15 ன் படி, வயதான பெற்றோரைக் கவனிப்பது குழந்தைகளின் கடமை என சட்டம் சொல்கிறது. இதனால் இழந்த அவர்களின் சொத்தும் திரும்ப கிடைக்கும். 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts