notification 20
Misc
#Water: ஏன் தலை குனிந்து சாப்பிடுகிறோம்? அண்ணாந்து தண்ணீர் குடிக்கிறோம்? காரணம் தெரிந்தால் வியந்து போவோம்!

எனக்கு டீவி பார்த்துக்கொண்டே சாப்பிட்டு பழக்கமாகிவிட்டதால், தட்டில் சாப்பாடு போட்ட உடனே, கண்கள் டீவி திரையை நோக்கி சென்றுவிடும். இதில் என்ன கொடுமை என்றால், மழை காலங்களில் சில நேரம் கேபிள் ஒளிபரப்பு தடைபடும். அந்த நேரத்திலும், டீவியை ஆன் செய்துவிட்டு சும்மா ஆச்சும் பார்த்துக்கொண்டே சாப்பிட்டால் தான் திருப்தியாக இருக்கும். இந்த பழக்கத்தை விட வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த லீவு முடிவதற்குள் நிச்சயம் அதற்கான பலன் கிடைத்துவிடும்.

இந்த பழக்கம் ஒரு பக்கம் என்றால், சில நேரங்களில் சோபாவில் படுத்துக்கொண்டே சாப்பிடும் பழக்கம் இன்னொரு பக்கம். எல்லாம் சின்ன வயதில் பழகியது, இன்னும் விடாமல் தொடர்கிறது. சாப்பிடும் போது, டீவி பார்ப்பதைக்கூட ஒரு லிஸ்டில் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் படுத்துக்கொண்டே சாப்பிடக்கூடாதாம். சாப்பாடு என்றால் குனிந்து சாப்பிட வேண்டும், தண்ணீர் என்றால் அண்ணாந்து தான் குடிக்க வேண்டும் என்று பாட்டி பலமுறை செல்லியிருந்தும், திமிருக்கு காதில் வாங்காமல் விளையாட்டுத்தனமாக இருந்துவிட்டேன்.

தலை குனியாமல் படுத்துக்கொண்டே, அல்லது வேறு கோணத்திலோ சாப்பிட்டால், அது உணவை விழுங்குவதற்கு சமமாம். அப்படி சாப்பிடும் போது, உணவு தொண்டையில் விக்கிக்கொள்ளும். நான் செய்த தவறைப்போல படுத்துக்கொண்டே சாப்பிட்டால், மூச்சு குழலில் உணவு சென்று புரையேறிவிடும். சிறு உணவு பருக்கை என்றால் பிரச்சனை இல்லை, பரோட்டா போன்ற உணவுகள் என்றால், ரொம்ப சிக்கலாகி விடும். இது தவிர, குனிந்து சாப்பிட்டால் தான், உணவு வாயில் அரைபட்டு, உமிழ் நீரோடு கலந்து வயிற்றுக்குள் சென்று செரிக்கும். 

இதுவே நீரை அண்ணாந்து குடிக்கிறோம் என்றால், அதில் எந்த சிக்கலும் இல்லை. நேரடியாக இரைப்பை நோக்கி சொல்லும். உணவை குனிந்து சாப்பிடவும், நீரை அண்ணாந்து குடிக்கவும் வேறு காரணமும் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். தலை குனிந்து உண்பது அரிசியைத் தந்த நிலத்திற்கு நன்றி செலுத்துவதன் அடையாளமாம். அண்ணாந்து நீர் பருகுவது வானத்திலிருந்து பொழியும் மழைக்கு நன்றி செலுத்துவதன் அடையாளமாம். கேட்கும் போதே ஆச்சர்யமா இருக்குல.

 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts