Daily News

உள்ளே நுழைய அனுமதி மறுப்பு! கடப்பாரையால் கதவை உடைத்த மருமகள்! வெளியூர் சென்ற மகன் வருவதற்குள் நடந்த சம்பவம்!

Sep 23 2022 07:35:00 AM

நமது ஊரில் தினம்தோறும் வரதட்சணை கொடுமை குறித்த ஏதாவது ஒரு விஷயம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. எவ்வளவு வரதட்சணை கொடுத்தாலும் நிம்மதியான வாழ்கை கிடைக்காத பெண்களும் அவர்களது குடும்பமும் தொடர்ந்து இன்னல் பட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படி தான் தற்போது மயிலாடுதுறையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது

mayiladuthurai dowry-torture

மயிலாடுதுறையில் வசிக்கும் நடராஜன் என்பவருக்கும் திருவாரூரை சேர்ந்த ப்ரவீனா என்பவருக்கும் சென்ற 2021-ம் வருடம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது ப்ரவீனாவுக்கு 25 பவுன் நகைகள், மற்றும் நடராஜனுக்கு டூவீலர் உட்பட பல்வேறு சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று மாதங்கள் திருமண வாழ்கை சுகமாக சென்ற நிலையில், புகுந்த வீட்டில் வரதட்சணை கொடுமையில் சிக்கியுள்ளார் ப்ரவீனா. ஏற்கனவே கொடுக்கப்பட்ட சீர்வரிசை போதவில்லை என்று ப்ரவீனாவை நடராஜன் குடும்பத்தினர் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது

mayiladuthurai dowry-torture

இந்நிலையில் வேலை மற்றம் காரணமாக நடராஜன் சென்னை சென்று இருக்கும் நிலையில், பிரச்னை உச்சமடைந்து ப்ரவீனா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். மேலும் நடராஜன் குடும்பத்தினர் வீட்டையும் பூட்டி விட்டதாக கூறப்படும் நிலையில் கடந்த 20 நாட்களாக ப்ரவீனா வீடு வாசலில் படுத்து உறங்கி கொண்டு இருந்துள்ளார். கிராம மக்கள் செய்த சமரச பேச்சுவார்த்தையும் தோல்வியடையவே, பொங்கி எழுந்த ப்ரவீனா கடப்பாரையால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார். இது குறித்து காவல்துறைக்கு தங்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது