Daily News

தினேஷ் கார்த்திக்கு வைக்கப்பட்ட "செக்"! அணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றால் இதை செய்தே ஆக வேண்டுமாம்! கடும் சவாலுடன் இந்திய அணி!

Aug 09 2022 09:55:00 AM

சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அதிலும் குறிப்பாக இளம் வீரர்களின் அதிரடியான ஆட்டம் காரணமாக எதிர்த்து வரும் மற்ற அணிகளை ஓட ஓட விரட்டியடிக்கிறது இந்திய அணி. ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது முதல் அணியில் துடிப்பான இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அவர்களும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு திறமையாக செயல்பட்டு வருகிறார்கள். 

dinesh karthik asia cup asia cup 2022 cricket

இந்நிலையில் ஒரு தொடருக்கான வீரர்களை தேர்வு செய்வதில் தேர்வுக்குழுவுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாம். 15 பேர் கொண்ட பட்டியலை தேர்வு செய்யும்போது யாரை விடுவது? என்று பெரும் யோசனைகளை செய்து வருகிறதாம் தேர்வுக்குழு. அந்த அளவுக்கு அணியில் இடம் பிடிக்க திறமைகளை வெளிப்படுத்த வேண்டி இருக்கிறது. 

dinesh karthik asia cup asia cup 2022 cricket

பேட்டிங் வரிசையில் முக்கிய வீரராக இருப்பவர் தினேஷ் கார்த்திக். அதிலும் குறிப்பாக கடைசியில் ஆட்டத்தின் போக்கை மாற்றம் செய்வதில் வல்லவராக இருக்கும் இவர் நீண்ட காலமாக அணியில் இடம்பெற கடும் போராட்டங்களை எதிர்கொண்டது அனைவரும் அறிந்த விஷயம். சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி "பினிஷர் " ரோலுக்கு ஏற்றவர் என்ற பெயரை பெற்றுள்ளார். 

dinesh karthik asia cup asia cup 2022 cricket

இந்த வரிசையில் தற்போது பினிஷர் ரோலுக்கு அதிக அளவில் அணியில் போட்டி நிலவி வருகிறது. ரிஷாப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆகியோர் நல்ல பார்மில் இருப்பதால் தினேஷ் கார்த்திக் கட்டாயம் இன்னும் அதிக அளவு திறமையை வெளிப்படுத்தி ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கிறார். இந்த எதிர்பார்ப்புகளுடன் ஆசிய கோப்பை போட்டிகளில் தினேஷ் கார்த்திக் தேர்வுசெய்யப்பட்டு இருக்கிறார். ஒருவேளை அவர் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் அணியில் அவர் தொடர்ந்து நீடிக்கலாம். ஒருவேளை அவரது விளையாட்டு திருப்திகரமாக இல்லையென்றால் அவர் அணியில் நீடிப்பது கஷ்டம் தான் என்று கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.