நமது பூமியில் பலகோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக கருதப்படும் ஒரு உயிரினம் தான் டைனோசர். பார்ப்பதற்கு பிரமாண்டமாக இருக்கும் இது ஒரே கர்ஜனையில் அந்த இடத்தையே அதிரச்செய்யும் அளவிற்கு சக்தி கொண்டது. இது மொத்தம் இரண்டு வகையாக இருக்கும். ஒன்று தாவர உண்ணிகள், மற்றொன்று மாமிச உண்ணிகள்.
இதில் தாவர உண்ணி டைனோசர்கள் மனிதர்களின் நண்பனாக இருக்கும். மாறாக மாமிச வகை டைனோசர்கள், கொ டூர குணம் கொண்டதாக இருக்கும். எந்த அளவிற்கு என்றால் தாவர உண்ணி டைனோசார்களையே அடித்து சாப்பிடும் அளவிற்கு கொ டூரமானதாக இருக்கும். இதனை கண்டு மனிதர்கள் மற்றும் மற்ற விலங்குகள் பயப்படுவதுபோல திரைப்படங்களில் வடிவமைக்கப்பட்டு இருக்கும். உண்மையில் இது சாத்தியமானது தானா? இல்லை நம்மை நம்ப வைப்பதற்காக இப்படி செய்கிறார்களா?
பொதுவாகவே திரைப்படங்கள் நம்மை நம்ப வைப்பதற்காக பல்வேறு கற்பனைகளை, நிஜமாக சித்தரிப்பது வழக்கமான ஒன்று தான். அதிலும் குறிப்பாக ஹாலிவுட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் வகையில் மேலும் திறம்பட வடிவமைக்கப்படும். இதில் இடம்பெறும் காட்சியமைப்புகள் நம்மை நம்ப வைப்பதற்காக மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் இதில் இருக்கும் பெரும்பாலான விஷயங்கள் கற்பனை தான்.
நமது கண்களுக்கு பிரம்மாண்டமாக காண்பிக்கப்படும் டைனோசர்கள் உண்மையில் சாதுவான பிராணிகள் (யானைகளை போல). அவை பெரும்பாலும் யாரையும் துன்புறுத்தாது என்று அறிவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் படத்தில் காட்டப்படுவது போல, டைனோசர்களால் கர்ஜனை செய்ய இயலாது. காரணம் அதன் குரல் வலை மிகவும் சிறியதாகத்தான் இருக்கும். இதனால் அந்த அளவிற்கு சத்தத்தை உருவாக்க வாய்ப்புகள் இல்லை என்றும் சில டைனோசர் படிம ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் டைனோசர்கள் நாம் நினைப்பது போல விலங்குகள் கிடையாது. அது ஒருவகை பல்லி இனம் என்றும் தெரிவிக்கின்றனர்.
பின்னர் எதற்காக திரையில் அப்படியெல்லாம் காட்டப்படுகிறது? அதற்கு காரணம் இருக்கையில் சொகுசாக அமர்ந்திருக்கும் ரசிகர்களை, இருக்கை நுனிக்கு கொண்டு வரும் அளவிற்கு சுவாரஸ்யத்தை அதிகரிக்கவும், அந்த கதாபாத்திரத்துக்கு மேலும் மெருகேற்றவும் தான் இவ்வாறாக செய்யப்படுகிறதாம்.