notification 20
Daily News
வீடு கட்ட குழி நோண்டியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! புறவாசல் வழியே என்ட்ரி கொடுத்த டைனோசர்!

வீட்டின் பின்புறம் டைனோசர் எலும்புகள் கிடைத்தால் இருக்கும்? அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போர்ச்சுக்கல்லில் அரங்கேறியுள்ளது. தோராயமாக இந்த எலும்பு படிமானத்தின் உயரம் 39 அடியும், நீளம் 82 அடியும் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய டைனோசர் எலும்பு இது தான் என கூறப்படுகிறது.

dinosaur fossil Portugal country

ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஆரம்பமான டைனோசர் எலும்பு அகழாய்வு இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2017ம் ஆண்டு ஒருவர் தன்னுடைய வீட்டின் பின்புறம் குழி தோண்டிய சமயத்தில் வினோதமான எலும்புகளை பார்த்து ஆச்சர்யமடைந்தார். அவர் கொடுத்த தகவல் படி அந்த இடத்துக்கு வந்த லிஸ்பன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உடனடியாக தங்கள் பணியை தொடங்கினர்.

dinosaur fossil Portugal country

பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த அகழாய்வில் தற்போது தான் டைனோசரின் முதுகெலும்பு, மார்புப்பகுதி எலும்பு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்த லிஸ்பன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இது 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விலங்கு என தெரிவித்துள்ளனர். எலும்புகளின் வயது மற்றும் உருவத்தை வைத்து பார்க்கும்போது சந்தேகத்துக்கு இடமின்றி இது டைனோசரின் எலும்பு தான் என்பது உறுதியாகிறது.

dinosaur fossil Portugal country

மிகவும் அரிதான விலங்காக கருதப்படும் டைனோசரின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அந்தப்பகுதியில் வீடு வாங்குவதற்கு போட்டி அதிகரிக்கும் என்று கூறுகின்றனர். ஐரோப்பாவின் மிகப்பெரிய டைனோசர் எலும்பு தங்கள் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் போர்ச்சுக்கல் நாட்டினர் பெருமிதம் அடைந்துள்ளனர்.

Share This Story

Written by

Logeshwaran View All Posts