notification 20
Highrise
எப்படியெல்லாம் யோசிச்சு சாதனை படைக்கிறாங்க! நம்மளும் இந்த மாதிரி ஏதாவது செஞ்சு பார்ப்போமா ?

நமக்கு கடினமாக தெரியும் ஒரு சில செயல்கள் சாதனையாளர்களுக்கு பெரிதாக தெரிவதில்லை. கின்னஸ் சாதனைகள் பலவற்றையும் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறது கின்னஸ் நிறுவனம். சமீபத்தில் வெளியான சாதனை ஒன்று அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஓபரோஇன் ஓடிடிக்பெஃப் என்பவர் ஹூலா ஹூப்பிங் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை இவர் இரண்டு டேபிள்களுக்கு நடுவில் புஷ் அப் எடுப்பது போல படுத்துக்கொண்டு வயிறு மற்றும் இடுப்பிற்கு நடுவில் கனமான வளையத்தை வைத்து செய்திருக்கிறார். மிகவும் கடினமான இந்த சாதனையை இவர் 3 நிமிடம் 16 நொடிகள் வரை செய்துள்ளார்

55f985ff-2619-4503-8345-5ddae18d83b6.jpg

இதுமட்டுமல்லாமல் ஹூலா ஹூப்பிங் செய்துகொண்டே 734 படிக்கட்டுகளை ஏறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி சாதனைகளை பார்க்கும் பொது நமக்கும் இப்படி ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனசு துடிக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் அவரசப்பட்டு ஏதாவது செய்து கை, கால்களை முறித்து கொள்ள வேண்டாம் நண்பர்களே. எதையும் நிறுத்தி நிதானமாக யோசித்து பொறுமையாக செய்யுங்கள். பலமுறை நன்றாக பயிற்சிகளை முறையாக மேற்கொண்ட பிறகு எந்த ஒரு விஷயத்தையும் செய்ய ஆரம்பியுங்கள். இல்லையேல் விளைவுகள் மிக மோசமாக இருக்கலாம்

 

Share This Story

Written by

Gowtham View All Posts