Daily News

காவலர்களுக்கு பிரியாணி விருந்து! 3 நாட்கள் விடுமுறையும் வழங்க திட்டம்! டிஜிபி சைலேந்திரபாபு கொடுத்த சர்ப்ரைஸ்!

Aug 11 2022 06:58:00 AM

தமிழகத்தில் காவல்துறை தொடர்ந்து சிறப்பாக செயலாற்றி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லாமல் மிகவும் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 162 நாடுகளை சேர்ந்த 2000 வீரர் வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். போட்டிகள் தொடங்கியது முதல் முடிவடையும் வரையில் காவல்துறையினர் இரவுபகலாக அயராது பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். 

biryani treat chess olympiat

இதனால் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் உலக நாடுகள் ஆச்சர்யப்படும் வகையில் சிறப்பாக இந்த போட்டி நடந்து முடிந்துள்ளது. மிகவும் குறுகிய நேரத்தில் நடத்தி முடிக்கப்பட்ட இந்த போட்டிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை திறம்பட செய்து முடித்துள்ளது குறித்து அனைத்து தரப்பினரிடையே நல்ல கருத்துகள் பேசப்பட்டு வருகிறது. இதற்க்கு முக்கியமான காரணமாக இருந்த காவல்துறைக்கு பாராட்டுகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் இருக்கிறது. 

biryani treat chess olympiat

இதனை மேலும் சிறப்பிக்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பிரியாணி விருந்து கொடுத்து சிறப்பித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் காவல்துறையினரோடு அமர்ந்து அவரும் உணவருந்தி இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகிவரும் நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட காவல்துறையினருக்கு 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.