notification 20
Misc
உலகிலேயே மக்கள் சந்தோசமாக வாழக்கூடிய நாடு இதுதான்! அப்படி என்னதான் இந்த நாட்டுல இருக்கு?

உலகிலேயே மக்கள் சந்தோசமாக வாழக்கூடிய நாடு டென்மார்க் தான். நீங்க யார்கிட்ட வேணும்னாலும் கேளுங்க, எல்லாரும் சொல்லுற பதில் டென்மார்க் நாடாக மட்டும் தான் இருக்கும். அப்படி என்னதான் இருக்கு இந்த நாட்டில். இந்த நாட்டை ஆட்சி செய்யும் அரசாங்கம் ஒரு நிலையான அரசாங்கம். ஐரோப்பிய கண்டத்தில் இந்த டென்மார்க் நாடு அமைந்துள்ளது.

இந்த நாட்டில் நடக்கும் ஊழலை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஊழல் செய்யும் போக்கே இங்குள்ள மனிதர்களிடம் இருக்காது என்றால் பாத்துக்கோங்க. இந்த நாட்டில் வழங்கப்படும் கல்வி மற்றும் மருத்துவத்தின் தரம் வேற லெவலில் இருக்கும். மக்களுக்கு குறைவான வரி விதிக்கிற அரசாங்கம் உள்ள நாடு இந்த டென்மார்க் தான்.

ஆனால் இங்கு வாழும் மக்கள் அரசாங்கத்துக்கு அதிக வரி செலுத்துவார்கள். அதுக்கும் ஒரு காரணம் இருக்கு. நம்ம அரசாங்கத்துக்கு நிறைய வரி செலுத்துனா அந்த பணத்தை வைத்து அரசு மக்களுக்கு நிறைய நலத்திட்ட உதவிகள் செய்யும் என்று அதிக வரி செலுத்துகிறார்கள். நம்ம நாட்டுல நம்ம என்னதான் நல்லா படிச்சு ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். பரிட்சை எல்லாம் பாஸ் பண்ணுனாலும் நீ இந்த சமூகத்தை சேர்ந்தவன், அதனால் உன்னோட இட ஒதுக்கீடு முடிஞ்சு போச்சு என்று சொல்லி அனுப்பிவிடுவார்கள்.

ஆனால் டென்மார்க் நாட்டில் மட்டும் மதிப்பெண்ணுக்கு மட்டும் தான் முன்னுரிமை கொடுப்பார்கள். இங்க வாழும் மக்கள் அரசாங்கத்துக்கு வரி செலுத்துவதை ரொம்ப சந்தோசமாக நினைக்கிறார்கள். கல்வி மற்றும் மருத்துவம் இந்த ரெண்டையும் இந்த அரசாங்கம் மக்களுக்கு முடிந்த அளவு இலவசமாக தருகிறது. கல்வியும், மருத்துவமும் இலவசமாக கிடைத்தால் தான் மக்கள் நல்ல நிலையை அடைய முடியும் என்பது இந்த நாட்டு அரசாங்கத்தின் எண்ணம்.

Share This Story

Written by

Karthick View All Posts