notification 20
Misc
தூங்கும் போது திடீரென கை, கால் அசைக்கமுடியாதபடி ஆகிறதா? நம்புங்க! உங்களுக்குள் நிச்சயம் இது தான் நடந்து கொண்டிருக்கிறது! பேய் அறைஞ்ச மாதிரி பார்க்க வேண்டாம்!

தூங்கும் போது சில நேரங்களில் பேய் அறைந்த மாதிரி ஆகிறது. கை, கால் அசைக்கச் சொல்லி மூளை சொல்கிறது. ஆனால் பக்கவாதம் வந்தது போல, எழுந்திரிக்கக்கூட முடிவதில்லை. இதெல்லாம் எதனால் நடக்கிறது? எனக்கு ஏதாவது பிரச்சனையா என்று யோசித்து கொஞ்ச நாள் சரியா தூக்கமே இல்லை. இப்போ ஓரளவுக்கு தூக்கம் பற்றிய புரிதல் வந்துள்ளது. கனவுகளில் முக்கியமாக நம்மை பயமுறுத்தும் கனவுகளே நகராமல் இருக்க காரணமாக அமைகின்றது.

பயத்தினால் உறைதல் என்னும் உணர்வே அதற்கு காரணமாக அமைகிறது. அந்த உணர்வு மூளையில் தாேன்றுகிறது. மூளை உடல் உறுப்புகளை கட்டுப்படுத்துகிறது. அதுவே நம்மை நகரவிடாமல் உண்மையில் நடப்பது பாேல் உணரச்செய்கிறது. தூங்கையில் எல்லா சமயங்களிலும் உடல் நகர்வு இல்லாமல் இருப்பதில்லை. சில கனவுகளின் பொழுது நம்மை அறியாமல் நகர்ந்து இருப்பாேம். அதை அறியாமல் இருப்பதற்கு காரணம் கனவுகளை தூங்கி எழும் பாெழுது மறந்து விடுவதே ஆகும்.

அடிக்கடி நான் படுக்கையில் இருந்து புரண்டு கீழே விழுந்திருப்பதும் உண்டு. அதற்கு காரணம் கனவுகளும் தான். தூங்கும் போது உடல் அசையாமல் இருப்பது இறைவன் கொடுத்த சிறப்பான அம்சம். அப்படி இருந்தும் சிலர் கை கால்களை சிறிது இயக்கி விடுகிறார்கள். ஒருவேளை தூங்கையிலும் கை கால்களை அசைப்பது மாதிரி இருந்தால், இந்நேரம் அருகில் படுத்திருக்கும் பலர், மாவுக்கட்டு போட்டு மருத்துவமனைக்கு போயிருக்க வேண்டி இருக்கும்.

கனவின் போது உடல் அசையாத உணர்வு அடிக்கடி வருகிறதென்றால், ஒவ்வொரு இரவும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்வது முக்கியம். கவனச்சிதறல்கள் இல்லாத ஒரு வசதியான தூக்க சூழலை உறுதி செய்ய வேண்டும்.  தூங்குவதற்கு முன் காஃபின் தவிர்ப்பது போன்ற பழக்கங்களை முறையாக கடைபிடித்து வந்தாலே கொஞ்சம் இந்த உணர்வுகள் குறைந்து விடும். 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts