Daily News

யாருக்கோ செஞ்ச செய்வினை, இப்போ நம்பள திருப்பி அடிக்கிறதோ? எல்லாத்தையும் விட்டுட்டு, பிடிக்க முடியாமல் திணறும் தனுஷ்!

Jul 30 2022 02:29:00 PM

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும் இளம் நடிகர் தனுஷ். இளசுகளின் கதாநாயகனாக திகழ்வதோடு மட்டுமல்லாமல், சினியுலகில் தனது திறமையான நடிப்பில் அதிக உயரம் தொட்டவர். ஆனால் சமீப காலமாக அவருக்கு நிகழும் அனைத்து விஷயங்களும் தவறாக தான் நடக்கிறதோ? என்ற சந்தேகம் ரசிகர்களிடம் வெகுவாக எழுந்துள்ளது. 

danush movies danus ott release maaran movie jagame thanthiram thiruchatrambalam

கொரோனா காலத்தில் பெரும்பாலான முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களை OTT-யில் வெளியிட விருப்பம் தெரிவிக்காத நிலையில் தனுஷ் தனது படங்களை அள்ளி கொடுத்தார். அப்படி OTT-யில் வெளியான "ஜெகமே தந்திரம்" மற்றும் "மாறன்" போன்ற திரைப்படங்கள் அதிக வசூலை எட்ட முடியவில்லை என்று கூறப்பட்டது. மேலும் தனது சொந்த வாழ்க்கையில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் தனுஷ் அந்த மனஉளைச்சலில் திரைப்படங்களில் கவனம் செலுத்துவதில் கோட்டை விட்டுவிட்டாரோ? என்று சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டல்கள் அரங்கேறினாலும் அதனை கவனத்தில் கொள்ளாமல் தொடர்ந்து நடித்து வருகிறார் தனுஷ். 

danush movies danus ott release maaran movie jagame thanthiram thiruchatrambalam

ஆனால் அவரது படங்கள் வசூல் வேட்டையில் மிகவும் சிரமத்தை எதிர்கொள்கிறது. எனவே, இனி OTT-யில் படத்தை வெளியிடப்போவது இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ள தனுஷ், தற்போது "திருச்சிற்றம்பலம்", "வாத்தி" போன்ற படங்களை தியேட்டரில் வெளியிடும் எண்ணத்தில் இருக்கிறாராம். இந்த படங்கள் வெற்றி பெறும்பட்சத்தில் தனது திரையுலக அந்தஸ்தை தனுஷ் மீண்டும் அடையலாம் என்று சொல்லப்படுகிறது.