daniel-balaji-latest-talk-about-bhairava-movie
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்து வசூலை வாரிக்குவிக்கும். சில படங்கள் மட்டுமே விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தாலும் வசூலில் எந்த படமும் குறை வைக்காது. அந்த வகையில் விஜய்யின் தெறி படம் மெகா பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

daniel-balaji-latest-talk-about-bhairava-movie
தெறி படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்காக விஜய் மொட்டை அடித்து நடித்திருந்தார். அதனால் விஜய் அடுத்து நடித்த பைரவா படத்திற்கு விக் வைத்து நடித்தார். இந்த பைரவா படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகும் மக்களை அதிகம் கவரவில்லை. இதற்கு ஒரு முக்கிய காரணம் விஜய்யின் தோற்றம் மற்றும் படத்தின் திரைக்கதை ரொம்ப மெதுவாக நகர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

daniel-balaji-latest-talk-about-bhairava-movie
இந்த பைரவா படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தவர் டேனியல் பாலாஜி. அண்மையில் காஷ்மீரில் இருந்து டெல்லிக்கு டேனியல் பாலாஜி வந்து கொண்டிருந்தபோது அந்த பாதையில் பாதுகாப்பு அதிகாரிகள் பலத்த சோதனை நடத்தியுள்ளனர். அப்போது டேனியல் பாலாஜியை பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் நீங்க பைரவா படத்தின் வில்லன் தானே, எங்களுக்கு உங்களை நல்லா தெரியும். அந்த பைரவா படத்தை வடமாநில மக்கள் அதிகம் டிவியில் ரசித்து பார்ப்பார்கள். நானே 1000 முறைக்கு மேல் அந்த படத்தை பார்த்துள்ளேன். நீங்க போகலாம் என்று சொல்லி வழி அனுப்பி வைத்துள்ளார் பாதுகாப்பு அதிகாரி. இதன் மூலம் தளபதி விஜய் வடமாநிலங்களில் கூட மிகவும் பிரபலமாகியுள்ளார் என்பது தெளிவாகிறது.
